மாவட்ட செய்திகள்

கர்நாடகத்தில் ஆட்சி அமைக்க ஜனதா தளம்(எஸ்) கட்சிக்கு நிபந்தனையற்ற ஆதரவு + "||" + The unconditional support for the Janata Dal (S) party to rule in Karnataka

கர்நாடகத்தில் ஆட்சி அமைக்க ஜனதா தளம்(எஸ்) கட்சிக்கு நிபந்தனையற்ற ஆதரவு

கர்நாடகத்தில் ஆட்சி அமைக்க ஜனதா தளம்(எஸ்) கட்சிக்கு நிபந்தனையற்ற ஆதரவு
கர்நாடகத்தில் ஆட்சி அமைக்க ஜனதா தளம்(எஸ்) கட்சிக்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்குவதாக சித்தராமையா கூறினார்.
பெங்களூரு,

கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சி கூட்டணி அமைத்துள்ளது. இதையடுத்து ஜனதா தளம்(எஸ்) தலைவர் குமாரசாமி, முதல்-மந்திரி சித்தராமையா மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் கவர்னரை நேரில் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரி கடிதம் கொடுத்தனர். அதன் பிறகு சித்தராமையா நிருபர்களிடம் கூறியதாவது:-


தேர்தலில் காங்கிரஸ் 78 இடங்களிலும், ஜனதா தளம்(எஸ்) 38 இடங்களிலும், சுயேச்சைகள் 2 தொகுதியிலும் வெற்றி பெற்றுள்ளன. கர்நாடகத்தில் ஆட்சி அமைக்க ஜனதா தளம்(எஸ்) கட்சிக்கு காங்கிரஸ் நிபந்தனையற்ற ஆதரவு வழங்குகிறது. இது தொடர்பான கடிதத்தை தேவேகவுடாவுக்கும், கவர்னருக்கும் கொடுத்துள்ளோம்.

மேலும் சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் 2 பேரின் ஆதரவும் எங்களுக்கு உள்ளது. ஆட்சி அமைக்க 111 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. ஆனால் எங்களுக்கு 118 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு உள்ளது. அதனால் ஜனதா தளம்(எஸ்) கட்சியை ஆட்சி அமைக்க கவர்னர் அழைக்க வேண்டும்.

இவ்வாறு சித்தராமையா கூறினார்.

அதைத்தொடர்ந்து, குமாரசாமி கூறுகையில், “கர்நாடக சட்டசபை தேர்தலில் யாருக்கும் தனி பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் எங்கள் கட்சிக்கு ஆதரவு அளிப்பதாக காங்கிரஸ் கடிதம் கொடுத்துள்ளது. ஜனதா தளம்(எஸ்) மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் ஆதரவு கடிதத்தை கவர்னரிடம் வழங்கியுள்ளேன். இதில் எங்கள் கட்சிக்கு பெரும்பான்மை இருப்பதால், ஜனதா தளம்(எஸ்) கட்சியை ஆட்சி அமைக்க அழைக்குமாறு நாங்கள் கவர்னரிடம் கூறினோம். வெற்றி பெற்றவர்களின் பெயர் பட்டியல் வந்தவுடன் அதை ஆய்வு செய்துவிட்டு முடிவு எடுப்பதாக கவர்னர் கூறினார். எங்களை ஆட்சி அமைக்க கவர்னர் அழைப்பார் என்று நாங்கள் நம்புகிறோம்“ என்றார்.

இவ்வாறு குமாரசாமி கூறினார்.


தொடர்புடைய செய்திகள்

1. காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் சித்தராமையாவுடன் சந்திப்பு
கர்நாடக மந்திரிசபை விரிவாக்கத்தின்போது மந்திரி பதவி கிடைக்காததால் அதிருப்தி அடைந்த எம்.எல்.ஏ.க்கள், சித்தராமையாவை நேற்று நேரில் சந்தித்து பேசினர். அப்போது தங்களது மனக் குமுறலை வெளியிட்டனர்.
2. ஷோபா, பாம்பு குடும்பத்தை சேர்ந்தவர் : சித்தராமையா பதிலடி
பா.ஜனதாவை சேர்ந்த ஷோபா எம்.பி., முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா பல் இல்லாத பாம்பு போன்றவர் என்று விமர்சித்தார்.
3. காங்கிரஸ் மந்திரிகளுடன் டி.கே.சிவக்குமார் திடீர் ஆலோசனை
சித்தராமையாவுக்கு கட்சியில் அதிகரித்து வரும் செல்வாக்கை தடுக்க காங்கிரஸ் மந்திரிகளுடன் டி.கே.சிவக்குமார் திடீரென்று ஆலோசனை நடத்தினார்.
4. முதல்-மந்திரி குமாரசாமி - சித்தராமையா அவசர ஆலோசனை
20 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் மும்பை செல்ல திட்டமிட்டு இருப்பதாக வெளியான தகவலை அடுத்து முதல்–மந்திரி குமாரசாமி, சித்தராமையா அவசர ஆலோசனை நடத்தினர்.
5. மந்திரி டி.கே.சிவக்குமாருக்கு சித்தராமையா அறிவுரை
பெலகாவி காங்கிரஸ் விஷயத்தில் தலையிட வேண்டாம் என்று மந்திரி டி.கே.சிவக்குமாருக்கு சித்தராமையா அறிவுறுத்தினார்.