9 தாசில்தார்கள் பணியிட மாற்றம்; கலெக்டர் பிரபாகர் உத்தரவு


9 தாசில்தார்கள் பணியிட மாற்றம்; கலெக்டர் பிரபாகர் உத்தரவு
x
தினத்தந்தி 16 May 2018 5:46 AM IST (Updated: 16 May 2018 5:46 AM IST)
t-max-icont-min-icon

ஈரோடு மாவட்டத்தில் 9 தாசில்தார்களை பணியிட மாற்றம் செய்து கலெக்டர் எஸ்.பிரபாகர் உத்தரவிட்டு உள்ளார்.

ஈரோடு,

ஈரோடு மாவட்டத்தில் உள்ள தாசில்தார்களை பணியிட மாற்றம் செய்து ஈரோடு மாவட்ட கலெக்டர் எஸ்.பிரபாகர் நேற்று உத்தரவிட்டார். அதன்படி, நம்பியூர் தாசில்தாராக இருந்த வி.ராணி கோபிசெட்டிபாளையம் சமூக பாதுகாப்புத்திட்ட தாசில்தாராகவும், கொடுமுடி தாசில்தார் எஸ்.அசோக்குமார் ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலக அகதிகள் மறுவாழ்வு தனி தாசில்தாராகவும், பெருந்துறை சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் அ.அசரபுனிசா மொடக்குறிச்சி தாசில்தாராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

மொடக்குறிச்சி தாசில்தார் பி.ஜெயக்குமார் ஈரோடு மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலக பறக்கும்படை தனிதாசில்தாராகவும், ஈரோடு ஆர்.டி.ஓ. நேர்முக உதவியாளர் என்.பாலசுப்பிரமணியம் கொடுமுடி தாசில்தாராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.

சத்தியமங்கலம் தேசிய நெடுஞ்சாலை தனிதாசில்தார் வி.உமாமகேஸ்வரன் நம்பியூர் தாசில்தாராக இடமாற்றம் செய்யப்பட்டார். மேலும், அவர் நம்பியூர் சமூக பாதுகாப்புத்திட்ட தாசில்தாராக கூடுதல் பொறுப்பு வகிக்கிறார். ஈரோடு மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலக பறக்கும் படை தனிதாசில்தார் எஸ்.சையது ஹமீது, கோபி கலால் மேற்பார்வையாளராகவும், கோபி கலால் மேற்பார்வையாளர் எஸ்.குமார் ஈரோடு கலால் மேற்பார்வை அலுவலராகவும், ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலக அகதிகள் மறுவாழ்வு தனிதாசில்தார் மாலதி ஈரோடு ஆர்.டி.ஓ. நேர்முக உதவியாளராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

பெருந்துறை தாசில்தார் வீரலட்சுமிக்கு பெருந்துறை சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் பொறுப்பும், சத்தியமங்கலம் நகர நிலவரித்திட்ட தனி தாசில்தார் எஸ்.கார்த்திக்கிற்கு சத்தியமங்கலம் தேசிய நெடுஞ்சாலை தனிதாசில்தார் பொறுப்பும், சத்தியமங்கலம் ஆதிதிராவிடர் நல தனி தாசில்தார் ஜீனத்துன்னிசாவுக்கு சத்தியமங்கலம் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் பொறுப்பும் கூடுதலாக வழங்கப்பட்டு உள்ளது.

Next Story