வீட்டின் முன் நின்ற கார்–ஸ்கூட்டர் எரிந்து நாசம் மர்ம நபர்கள் தீ வைத்தார்களா? போலீஸ் விசாரணை


வீட்டின் முன் நின்ற கார்–ஸ்கூட்டர் எரிந்து நாசம் மர்ம நபர்கள் தீ வைத்தார்களா? போலீஸ் விசாரணை
x
தினத்தந்தி 17 May 2018 4:45 AM IST (Updated: 16 May 2018 10:50 PM IST)
t-max-icont-min-icon

கன்னியாகுமரி அருகே வீட்டின் முன் நின்ற கார்– ஸ்கூட்டர் தீயில் எரிந்து நாசமாகின. மர்ம நபர்கள் இந்த வாகனங்களுக்கு தீவைத்தார்களா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கன்னியாகுமரி,

கன்னியாகுமரி அருகே லீபுரம் வடக்குதெருவை சேர்ந்தவர் ஏசுநேசன் (வயது51), வெளிநாட்டில் வேலைபார்த்து வருகிறார். இங்குள்ள வீட்டில் அவரது குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இவர்களது வீட்டின் முன் கார், ஸ்கூட்டர் நிறுத்தப்பட்டிருந்தன.

நேற்று அதிகாலையில் காரும், ஸ்கூட்டரும் திடீரென தீப்பிடித்து எரிந்தன. சத்தம் கேட்டு வீட்டில் தூங்கி கொண்டிருந்தவர்கள் எழுந்து வெளியே வந்த போது, காரும், ஸ்கூட்டரும் தீயில் எரிவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் தண்ணீர் ஊற்றி தீயை அணைக்க முயன்றனர். அதற்குள் 2 வாகனங்களும் முற்றிலும் எரிந்து நாசமாயின.

மர்ம நபர்கள்

இதுகுறித்து கன்னியாகுமரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அந்த புகாரின் அடிப்படையில் வாகனங்கள் எவ்வாறு தீயில் எரிந்தன? மர்ம நபர்கள் தீ வைத்தார்களா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story