மாவட்ட செய்திகள்

அரசு ஆஸ்பத்திரியில் தவறான ஆபரேஷனால் குழந்தை இறந்ததாக கூறி உறவினர்கள் ‘திடீர்’ முற்றுகை + "||" + Relatives 'sudden' siege by the government claiming that the child died due to illicit surgery in the state hospital

அரசு ஆஸ்பத்திரியில் தவறான ஆபரேஷனால் குழந்தை இறந்ததாக கூறி உறவினர்கள் ‘திடீர்’ முற்றுகை

அரசு ஆஸ்பத்திரியில் தவறான ஆபரேஷனால் குழந்தை இறந்ததாக கூறி உறவினர்கள் ‘திடீர்’ முற்றுகை
திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் தவறான ஆபரேஷனால் குழந்தை இறந்ததாக கூறி உறவினர்கள் ‘திடீர்’ முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அறை கண்ணாடி உடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்சி,

திருச்சி எடமலைப்பட்டிபுதூரை சேர்ந்தவர் பைசல்(வயது31). இவர் பழைய இரும்பு கடை நடத்தி வருகிறார். பைசலுக்கும், முதலியார் சத்திரத்தை சேர்ந்த ராபியத் பஷிரியா(25) என்ற பெண்ணுக்கும் கடந்த 1½ ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த நிலையில் ராபியத் பஷிரியா கர்ப்பமானார்.


நிறைமாத கர்ப்பிணியான அவரை, நேற்று முன்தினம் திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் தலைப்பிரசவத்திற்காக சேர்த்தனர். அங்கு முறையான சிகிச்சை மேற்கொள்ளவில்லை என்றும், வயிறு வலியால் அவதிப்பட்டும் யாரும் கண்டு கொள்ளவில்லை என்றும் கணவர் பைசல் மற்றும் உறவினர்களிடம் ராபியத் பஷிரியா முறையிட்டுள்ளார். இந்த நிலையில் நேற்று காலை வலியால் அவர் துடித்துள்ளார். டாக்டர்கள் பரிசோதித்து விட்டு குழந்தையை ஆபரேஷன் செய்து எடுத்ததாக கூறப்படுகிறது. ஆனால், குழந்தை இறந்தே பிறந்ததாக டாக்டர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அதைக்கேட்டு பைசல் உள்ளிட்ட உறவினர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக பிரசவ வார்டை முற்றுகையிட்டு, சிகிச்சை அளித்த டாக்டரிடம் விவரம் கேட்டனர். ஆனால், அங்கு பணியில் இருந்த ஊழியர்கள் மற்றும் செவிலியர்கள் முறையான பதில் அளிக்கவில்லை எனக்கூறி, வார்டு உள்ளே நுழைய முயன்றனர். அவர்களை உள்ளே விடாமல் ஊழியர்கள் தடுத்தனர். இதனால், ஏற்பட்ட தள்ளு முள்ளுவால் அங்கிருந்த அறையின் கண்ணாடி உடைந்தது. இதனால், பரபரப்பு ஏற்பட்டது.

அதைத்தொடர்ந்து ஆஸ்பத்திரி ஊழியர்கள், அங்கிருந்த அரசு ஆஸ்பத்திரி போலீஸ் நிலையத்தில் தங்களை பணி செய்யவிடாமல் தடுத்து தாக்க வருவதாக புகார் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

இது தொடர்பாக உறவினர்கள் தரப்பில் கூறியதாவது:-

பிரசவத்துக்காக அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட ராபியத் பஷிரியாவுக்கு முறையான ஸ்கேன் எடுத்து சோதிக்கவில்லை. வலியால் அலறி துடித்த பின்னர் ஆபரேஷன் செய்து குழந்தையை எடுத்துள்ளனர். குழந்தை உடலில் காயம் உள்ளது. அதனால்தான் குழந்தை இறந்துள்ளது. ஏழை பெண்கள் பலர் பிரசவத்திற்காக அரசு ஆஸ்பத்திரியை நம்பிதான் வருகிறார்கள். ஆனால், ஆஸ்பத்திரியில் சரியாக கவனிப்பதில்லை. எனவே, குழந்தை இறப்புக்கு காரணமான டாக்டர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இதை கேட்க சென்றபோதுதான், ஆஸ்பத்திரி நிர்வாகம் நாங்கள் ஏதோ தவறு செய்து விட்டதாக போலீசில் புகார் கூறுகிறார்கள்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

நீண்ட நேர விவாதத்திற்கு பிறகும், முடிவுக்கு வராத நிலையில் இறந்த குழந்தையை கையில் தூக்கி சுமந்தவாறு பைசல் கண்ணீருடன் சென்றது நெஞ்சை நெகிழ வைப்பதாக இருந்தது. 


தொடர்புடைய செய்திகள்

1. புதுக்கடை அருகே சித்த மருத்துவ கல்லூரி மாணவ–மாணவிகள் திடீர் போராட்டம்
புதுக்கடை அருகே முன்சிறை சித்த மருத்துவ கல்லூரி மாணவ–மாணவிகள் திடீரென போராட்டம் நடத்தினர்.
2. சம்பளம் வழங்க கோரி நகராட்சி-பேரூராட்சி அலுவலகங்களை துப்புரவு பணியாளர்கள் முற்றுகை
சம்பளம் வழங்ககோரி நகராட்சி, பேரூராட்சி அலுவலகங்களை துப்புரவு பணியாளர்கள் முற்றுகையிட்டனர்.
3. கறம்பக்குடியில் அதிகாரிகள் வராததால் பூட்டியிருந்த வாக்குச்சாவடி மையத்தை தி.மு.க.வினர் முற்றுகை
கறம்பக்குடியில் அதிகாரிகள் வராததால் பூட்டியிருந்த வாக்குச்சாவடி மையத்தை தி.மு.க.வினர் முற்றுகையிட்டனர்.
4. குடியிருப்புகளை அகற்ற எதிர்ப்பு: அம்பத்தூர் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்
குடியிருப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து அம்பத்தூர் தாலுகா அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
5. சுத்தமான குடிநீர் வழங்க கோரி குளச்சல் நகராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
சுத்தமான குடிநீர் வழங்க கோரி குளச்சல் நகராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள்.