பிரதமர் குறித்து அவதூறு கருத்து; வாலிபர் கைது


பிரதமர் குறித்து அவதூறு கருத்து; வாலிபர் கைது
x
தினத்தந்தி 18 May 2018 5:19 AM IST (Updated: 18 May 2018 5:19 AM IST)
t-max-icont-min-icon

பிரதமர் குறித்து அவதூறு கருத்து வெளியிட்ட வாலிபர் கைது செய்யப்பட்டார்.

மும்பை

பிரதமர் மோடி மற்றும் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் பற்றி டுவிட்டரில் அவதூறு கருத்து வெளியிட்டதாக 2 பேர் மீது ஜூகு போலீசில் கடந்த 14-ந் தேதி புகார் அளிக்கப்பட்டது.

போலீசார் வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில் பிரதமர், முதல்-மந்திரி குறித்து அவதூறு கருத்து வெளியிட்டது சினிமா இயக்குனர் ராம் சுப்ரமணியன் மற்றும் மும்பை கோரேகாவ் பகுதியை சேர்ந்த வாலிபர் அங்கித் பாட்டீல் (வயது25) என்பது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் காலை கோரேகாவில் வைத்து வாலிபர் அங்கித் பாட்டீலை கைது செய்தனர். 

Next Story