ஏழை மாணவியின் படிப்பு செலவை மு.க.ஸ்டாலின் ஏற்றார்


ஏழை மாணவியின் படிப்பு செலவை மு.க.ஸ்டாலின் ஏற்றார்
x
தினத்தந்தி 19 May 2018 5:00 AM IST (Updated: 19 May 2018 2:12 AM IST)
t-max-icont-min-icon

ஏழ்மை நிலை காரணமாக தொடர்ந்து மேற்கல்வி பயில இயலாத நிலையை எடுத்து கூறிய அம்மாணவியின் மேற்படிப்புக்கான அனைத்து செலவுகளை தானே ஏற்பதாகவும், அத்துடன் அம்மாணவியின் தங்கைகளின் கல்விக்காக உதவிநிதியாக ரூ.50 ஆயிரம் வழங்கினார்.

சென்னை,

கொளத்தூர் தொகுதிக்கு உட்பட்ட வீனஸ் மார்க்கெட் தெருவில் உள்ள சென்னை மாநகராட்சி பள்ளியான சென்னை பெண்கள் மேல் நிலைப் பள்ளியில் பயின்ற மாணவி எஸ்.சகினா ஆப்ரின் பிளஸ்-2 தேர்வில் 1,178 மதிப்பெண் பெற்றுள்ளார். அவர் அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

வாழ்த்து பெற்ற மாணவி எஸ்.சகினா ஆப்ரின், தன் குடும்பத்தின் ஏழ்மை நிலை காரணமாக தொடர்ந்து மேற்கல்வி பயில இயலாத நிலையை எடுத்து கூறினார். அதனை கேட்ட மு.க.ஸ்டாலின், அம்மாணவியின் மேற்படிப்புக் கான அனைத்து செலவுகளை தானே ஏற்பதாகவும், அத்துடன் அம்மாணவியின் தங்கைகளின் கல்விக்காக உதவிநிதியாக ரூ.50 ஆயிரம் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில், சென்னை கிழக்கு மாவட்டச் செயலாளர் பி.கே.சேகர்பாபு எம்.எல்.ஏ, கொளத்தூர் மேற்கு பகுதிச் செயலாளர் நாகராஜ், வட்டச் செயலாளர் அதிபதி உள்பட பலர் கலந்து கொண்டனர். இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story