ரூ.5 கோடி போதை மூலிகையுடன் வெளிநாட்டு பெண் கைது


ரூ.5 கோடி போதை மூலிகையுடன் வெளிநாட்டு பெண் கைது
x
தினத்தந்தி 19 May 2018 4:57 AM IST (Updated: 19 May 2018 4:57 AM IST)
t-max-icont-min-icon

மும்பை சர்வதேச விமான நிலையத்தில் ரூ.5 கோடி மதிப்பிலான மூலிகை போதைப்பொருளுடன் வெளிநாட்டு பெண் கைது செய்யப்பட்டார்.

மும்பை,

மும்பை சர்வதேச விமான நிலையத்திற்கு சம்பவத்தன்று துபாய் வழியாக எத்தியோப்பியாவில் இருந்து விமானம் ஒன்று வந்து இறங்கியது. விமானத்தில் இருந்த பயணிகள் வழக்கமான சோதனையை முடித்து கொண்டு வெளியேறி கொண்டு இருந்தனர். அப்போது வெளிநாட்டு பெண் பயணி ஒருவரின் நடவடிக்கையில் போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

எனவே அவர்கள் பெண்ணின் உடைமைகளில் சோதனை நடத்தினர். அப்போது அவர் 56 கிலோ ‘மிரா இலை’ எனப்படும் போதை மூலிகையை கடத்தி வந்தது தெரியவந்தது.

ரூ.5 கோடி மதிப்பிலான அந்த போதை மூலிகையை பறிமுதல் செய்த போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் அதை கடத்தி வந்த பெண் பயணியை கைது செய்தனர்.

விசாரணையில், அவர் கென்யாவை சேர்ந்த தோரிஸ் மதோனி (வயது24) என்பது தெரியவந்தது. அவர் பணத்திற்காக போதை மூலிகையை கடத்தி வந்ததாக கூறியுள்ளார்.

எனவே அவர் யாரிடம் கொடுக்க போதை மூலிகையை கடத்தி வந்தார் என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது. 

Next Story