கர்நாடகாவில் எந்த அரசு அமைந்தாலும் காவிரி நீரை அ.தி.மு.க. அரசு கண்டிப்பாக பெற்று தரும் - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேச்சு
கர்நாடகாவில் எந்த அரசு அமைந்தாலும் காவிரி நீரை அ.தி.மு.க. அரசு கண்டிப்பாக பெற்று தரும் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசினார்.
மதுரை,
திருமங்கலத்தில் ஜெயலலிதா பேரவையின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று நடந்தது. மாநில செயலாளரும், அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். அவர் பேசும் போது கூறியதாவது:–
அ.தி.மு.க.வில் 1½ கோடி தொண்டர்களை உருவாக்கியவர் ஜெயலிலதா. இந்த இயக்கத்தில் 2 கோடி தொண்டர்களை உருவாக்கும் வண்ணம் தமிழகம் முழுவதும் பேரவை சார்பில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் நடைபெற்று வருகிறது.
மெஜாரிட்டி இல்லாத ஒருவர் பதவி ஏற்று அதை நிருபிக்க முடியாமல் இன்று ராஜினிமா செய்து உள்ளார். இது போல் இந்த அரசுக்கு நெருக்கடி வந்த போது சட்டசபையில் நெஞ்சை நிமிர்த்து மெஜாரிட்டியை நிருபித்து நாங்கள் வெற்றி பெற்றோம்.
ஏழை, எளிய மக்களுக்கு சேவை செய்யும் இந்த அரசு, உங்களுக்கு கொடுக்கும் திட்டங்கள் அனைத்தும் சிந்தாமல் சிதிராமல் கிடைக்க நான் தபால்காரனாக உங்களுக்கு செயல்படுவேன். எனவே பேரவை சார்பில் 50 லட்சம் உறுப்பினர்கள் தீவிரமாக சேர்க்கப்பட்டு வருகிறது. கர்ந்£டகவில் எந்த அரசு வரவேண்டும் என்று அம்மாநில மக்கள் எடுக்கும் முடிவு ஆகும்.
காவிரி பிரச்சினையில் படிப்படியாக வெற்றி பெற்று வருகிறோம். கர்நாடவில் எந்த அரசு அமைந்தாலும் காவிரி நீரை அ.தி.மு.க. அரசு கண்டிப்பாக பெற்று தரும்.
இவ்வாறு அவர் கூறினார்.