லாஸ்பேட்டையில் கல்லூரி உதவி பேராசிரியர் தூக்குப்போட்டு தற்கொலை
லாஸ்பேட்டையில் கல்லூரி உதவி பேராசிரியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
புதுச்சேரி,
சென்னை தாம்பரம் பகுதியை சேர்ந்தவர் சிவசுப்ரமணியன். இவருடைய மனைவி சுகுணா. இவர்களது மகன் அரவிந்த் (வயது 25). அங்குள்ள தனியார் கல்லூரியில் உதவி பேராசிரியராக பணியாற்றி வந்தார். இவர்களுக்கு புதுவை லாஸ்பேட்டை குமரன் நகரில் சொந்தமாக ஒரு வீடு உள்ளது. புதுச்சேரிக்கு வரும்போது இந்த வீட்டில் அவர்கள் தங்குவது வழக்கம்.
இந்தநிலையில் கடந்த சில நாட்களாக அரவிந்த் இங்கு வந்து தங்கி இருந்தார். மனஅழுத்தத்தால் பாதிக்கப்பட்டு இருந்த அவர் பெற்றோர், நண்பர்கள் உள்பட யாருடனும் பேசாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
நேற்று முன்தினம் காலையில் புதுச்சேரியில் நடந்த தனது நண்பரின் பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்டார். இதன்பின் லாஸ்பேட்டை குமரன் நகரில் உள்ள தனது வீட்டிற்கு சென்றார். மாலையில் திரும்பி வருவார் என்று எதிர்பார்த்த நிலையில் அரவிந்த் வரவில்லை. இதனால் சந்தேகமடைந்து அவரது வீட்டுக்கு சென்று நண்பர்கள் பார்த்தபோது அங்கு அவர் தூக்கில் பிணமாக தொங்குவது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அரவிந்தின் நண்பர்கள் இது குறித்து லாஸ்பேட்டை போலீசில் புகார் செய்தார்.உடனே போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் கோவிந்தன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து அரவிந்த் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story