காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி ஜனாதிபதிக்கு தபால் அனுப்பி தி.மு.க.வினர் போராட்டம்


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி ஜனாதிபதிக்கு தபால் அனுப்பி தி.மு.க.வினர் போராட்டம்
x
தினத்தந்தி 20 May 2018 2:45 AM IST (Updated: 20 May 2018 1:38 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூர் ஒன்றிய தி.மு.க. சார்பில் பெருமாநல்லூரில் காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்கக்கோரி ஜனாதிபதிக்கு தபால் அனுப்பும் போராட்டம் நடந்தது.

பெருமாநல்லூர்,

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் படி காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்கக்கோரி, திருப்பூர் ஒன்றிய தி.மு.க. சார்பில் ஜனாதிபதிக்கு தபால் அனுப்பும் போராட்டம் பெருமாநல்லூரில் நடந்தது. பெருமாநல்லூர் தபால் நிலையம் முன்பு நடந்த இந்த போராட்டத்துக்கு தி.மு.க. ஒன்றிய செயலாளர் விஸ்வநாதன் தலைமை தாங்கினார். ஒன்றிய பொதுக்குழு உறுப்பினர் சண்முகசுந்தரம், ஒன்றிய விவசாய அணி அமைப்பாளர் திருமூர்த்தி, ஊராட்சி செயலாளர்கள் ஈஸ்வரமூர்த்தி, பழனிசாமி, மாவட்ட பிரதிநிதிகள் அண்ணாதுரை, மனோகரன், ஈஸ்வரமூர்த்தி, வீராச்சாமி ஆகியோர் கலந்து கொண்டு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி ஜனாதிபதிக்கு தபால்களை அனுப்பினார்கள்.


Next Story