பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்


பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 19 May 2018 10:45 PM GMT (Updated: 19 May 2018 9:32 PM GMT)

நாகையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாகப்பட்டினம்,

தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாகை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு மாவட்ட தலைவர் குமார் தலைமை தாங்கினார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெய்குமார், மாவட்ட துணை தலைவர் மனோகர், துணை செயலாளர்கள் திருமாவளவன், சிவவேலன், மாவட்ட மகளிரணி செயலாளர் மீராகாந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில செயலாளர் சீத்தாராமன் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். தமிழகத்தின் பள்ளி கல்வித்துறை மற்றும் தொடக்கக்கல்வி துறையில் பணி நிரவலை முழுமையாக கைவிட வேண்டும்.

1997-ம் ஆண்டு வரை கடைபிடிக்கப்பட்ட ஆசிரியர் மாணவர் விகிதம் 1:20 என்பதை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும். கல்வி உரிமைச்சட்டத்தின் மூலம் தமிழக அரசின் நிதியை தனியார் பள்ளிகளுக்கு வழங்குவதை நிறுத்த வேண்டும். ஒளிவு மறைவற்ற வெளிப்படையான பொது மாறுதல் கலந்தாய்வினை நடத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இதில் வேதாரண்யம் ஒன்றிய தலைவர் பாலசுப்பிரமணியன், குத்தாலம் வட்டார தலைவர் முருகேசன், செம்பனார்கோவில் ஒன்றிய தலைவர் மணிவண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் ஸ்ரீதர் நன்றி கூறினார்.


Next Story