ஓட்டல் நிர்வாகம் மீது நடவடிக்கை - கலெக்டர் ரோகிணி


ஓட்டல் நிர்வாகம் மீது நடவடிக்கை - கலெக்டர் ரோகிணி
x
தினத்தந்தி 19 May 2018 10:57 PM GMT (Updated: 19 May 2018 10:57 PM GMT)

3 பேர் இறந்த சம்பவம் தொடர்பாக ஓட்டல் நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் ரோகிணி தெரிவித்தார்.

சேலம் ,

சேலம் நெய்காரப்பட்டியில் அடையார் ஆனந்தபவன் ஓட்டலில் சுவர் இடிந்து விழுந்து 3 பேர் இறந்த சம்பவம் குறித்து அறிந்த மாவட்ட கலெக்டர் ரோகிணி நேற்று இரவு சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது, விபத்து நடந்தது எப்படி? என்பது குறித்தும், ஓட்டல் அனுமதி பெற்று இயங்குகிறதா? என்பது குறித்தும் அங்கிருந்த போலீசார் மற்றும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். அப்போது மாவட்ட கலெக்டர் ரோகிணி நிருபர்களிடம் கூறுகையில், விபத்து நடந்த ஓட்டல் உரிய அனுமதி பெறாமல் செயல்பட்டு வந்தது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட ஓட்டல் நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், மாவட்டம் முழுவதும் உள்ள ஓட்டல்களில் கட்டிடத்தின் உறுதித்தன்மை ஆய்வு செய்யப்படும் என்றார்.

மேலும், இந்த சம்பவத்தில் படுகாயம் அடைந்து சேலம் அருகே தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் ரவிக்குமாரை, கலெக்டர் ரோகிணி நேரில் பார்வையிட்டு நலம் விசாரித்தார். அப்போது, ஆஸ்பத்திரியில் இருந்த அவரது உறவினர்களுக்கு கலெக்டர் ஆறுதல் கூறினார்.


Next Story