மோட்டார் சைக்கிள்-லாரி மோதல்; பழ வியாபாரி பலி


மோட்டார் சைக்கிள்-லாரி மோதல்; பழ வியாபாரி பலி
x
தினத்தந்தி 19 May 2018 11:51 PM GMT (Updated: 19 May 2018 11:51 PM GMT)

திருவள்ளூர் அருகே மோட்டார் சைக்கிள்- லாரி மோதிய விபத்தில் பழ வியாபாரி பலியானார்.

திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த வேப்பம்பட்டை சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மகன் சரவணன் (வயது 26). பழ வியாபாரி. இந்த நிலையில் நேற்று முன்தினம் சரவணன் தனது மோட்டார் சைக்கிளில் வேலையின் காரணமாக திருவள்ளூருக்கு வந்து கொண்டிருந்தார்.

அவர் செவ்வாப்பேட்டை துர்க்கையம்மன் கோவில் அருகே வந்து கொண்டிருந்தபோது எதிர்திசையில் பூந்தமல்லி நோக்கி வேகமாக வந்த லாரி ஒன்று எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்ட சரவணணுக்கு தலை மற்றும் உடலில் பலத்த காயம் ஏற்பட்டது. இதை பார்த்த அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்

அவ்வாறு செல்லும் வழியிலேயே சரவணன் பரிதாபமாக இறந்து போனார். இது குறித்து செவ்வாப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story