ரூ.79 லட்சம் தங்கத்தை கடத்த முயன்ற ஏர் இந்தியா ஊழியர் உள்பட 3 பேர் கைது


ரூ.79 லட்சம் தங்கத்தை கடத்த முயன்ற ஏர் இந்தியா ஊழியர் உள்பட 3 பேர் கைது
x
தினத்தந்தி 20 May 2018 5:26 AM IST (Updated: 20 May 2018 5:26 AM IST)
t-max-icont-min-icon

ரூ.79 லட்சம் தங்கத்தை கடத்த முயன்ற ஏர் இந்தியா ஊழியர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மும்பை,

மும்பை சர்வதேச விமானநிலையத்தில் நேற்று முன்தினம் சுங்க அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் ஏர் இந்தியா ஊழியர் அஸ்ரத்கான் என்பவரை பிடித்து சோதனை போட்டனர். அப்போது அவரது ‘ஷூ'வில் இருந்து ரூ.79 லட்சம் மதிப்பிலான 3 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

பின்னர் அவரிடம் சுங்க அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

இதில் அன்வர்அலி என்ற பயணி துபாயில் இருந்து கடத்தி வந்த தங்கத்தை, மும்பை விமான நிலைய கழிவறையில் வைத்து அவரிடம் இருந்து அஸ்ரத்கான் வாங்கி தனது ‘ஷூ’வில் மறைத்து வைத்ததும், பின்னர் விமான நிலையத்திற்கு வெளியே நின்று கொண்டு இருந்த சலீம் இனாம்தார் என்பவரிடம் தங்கத்தை ஒப்படைக்க சென்ற போது சுங்க அதிகாரிகளிடம் பிடிபட்டதும் தெரிய வந்தது. இதையடுத்து 3 பேரையும் கைது செய்த சுங்க அதிகாரிகள் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story