ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமனுடன் முதல்-மந்திரி பட்னாவிஸ் சந்திப்பு

முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவில் மும்பை சயாத்ரி விருந்தினர் இல்லத்தில் ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசினார்.
மும்பை,
மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் ராணுவ முகாமுக்கு சொந்தமான நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருப்பது குறித்து இந்த சந்திப்பின் போது பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக அதிகாரிகள் வெளியிட்ட செய்திக்குறிப்பில், மாநிலத்தின் வளர்ச்சி திட்டங்களை நிறைவேற்ற ராணுவ அமைச்சகம் சார்பில் முழு ஒத்துழைப்பு வழங்கப்படும் என மந்திரி நிர்மலா சீதாராமன் உறுதியளித்ததாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த சந்திப்பில் ராணுவதுறை செயலாளர் சஞ்சய் மித்ரா, மாநில நிதிதுறை கூடுதல் செயலாளர் மதன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story