ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ஆற்றுக்கரையை தகர்க்கும் மண் கொள்ளையர்


ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ஆற்றுக்கரையை தகர்க்கும் மண் கொள்ளையர்
x
தினத்தந்தி 21 May 2018 1:21 AM IST (Updated: 21 May 2018 1:21 AM IST)
t-max-icont-min-icon

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ஆற்றுக்கரையை மண் கொள்ளையர் வெட்டி எடுத்துச்செல்கின்றனர். இதில் உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீவில்லிபுத்தூர்,

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே படிக்காசுவைத்தான்பட்டி கண்மாயின் மடை நீர் மற்றும் பாசன பகுதி நீரை காயல்குடி ஆற்றில் இணைக்கும் ஆறு செல்கிறது. இதில் இடையபொட்டல்பட்டிக்கு மேற்கேயும் வைத்தியலிங்காபுரத்திற்கு கிழக்கேயும் உள்ள ஆச்சி மடையார் கோவில் முன்பாக உள்ள பகுதியில் கடந்த சில தினங்களாக ஜே.சி.பி. எந்திரத்தை கொண்டு கரையில் இருக்கும் மண்ணை அள்ளுகின்றனர்.

இந்த மண் கொள்ளைக்கும்பல் ஆற்றுக்கு நடுவில் ஆச்சி மடையார் கோவிலுக்கு செல்லும் கரையையும் தகர்த்து மண் அள்ளி செல்கிறது. இதனை தட்டிக்கேட்டோரை மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.

ஆற்றின் கரையோரத்தில் முறையற்று மண் தோண்டி வருவதால் ஆற்றின் நீர் போக்கு தன்மை மாறி விளைநிலங்களை அழிக்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. இந்தப்பகுதியில் கோவிலுக்கும் வயலுக்கும் செல்வோர் இந்த கரையை பயன்படுத்தி வந்தனர். மண் கொள்ளையால் அந்த நடைபாதை அழிக்கப்பட்டு வருகிறது.

அதிகாரிகள் இதில் உடனடியாக நடவடிக்கை எடுத்து ஆற்றுக்கரையை காத்திட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


Next Story