அபுதாபியில் இறந்த தொழிலாளியின் உடலை கொண்டுவர மனு


அபுதாபியில் இறந்த தொழிலாளியின் உடலை கொண்டுவர மனு
x
தினத்தந்தி 21 May 2018 1:24 AM IST (Updated: 21 May 2018 1:24 AM IST)
t-max-icont-min-icon

அபுதாபியில் இறந்த தொழிலாளியின் உடலை சொந்த ஊருக்கு கொண்டுவர அவருடைய குடும்பத்தினர் சப்–கலெக்டரிடம் மனுகொடுத்துள்ளனர்.

கமுதி,

கமுதி அருகே உள்ள கருங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் மலைச்சாமி மகன் முனியசாமி(வயது 45). இவர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு துபாய் நாட்டிற்கு சென்று தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் அவர் திடீரென இறந்து போனதாக அவரது நண்பர் செல்போன் மூலம் முனியசாமியின் குடும்பத்துக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

இதனால் அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சிஅடைந்தனர். மேலும் இறந்த முனியசாமியின் உடலை சொந்த ஊருக்கு கொண்டுவர உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி பரமக்குடி சப்–கலெக்டர் விஷ்ணு சந்திரனிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

உறுதி

இந்த மனுவை பெற்றுக்கொண்ட அவர் மாவட்ட கலெக்டர் மூலம் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இறந்த முனியசாமிக்கு கஸ்தூரி (40) என்ற மனைவியும், மருதுபாண்டி(21), அஜித்குமார்(17), மனோ(12) ஆகிய மகன்களும் உள்ளனர்.

இதுகுறித்து அவருடைய மகன் மருதுபாண்டி கூறும்போது, கல்லூரியில் படித்து வரும் தான் தொடர்ந்து படிக்கவும், தம்பிகள் படிப்பை தொடரவும் தமிழக அரசு குடும்ப நல உதவி வழங்க வேண்டும் என்று தெரிவித்தார்.


Next Story