திருப்பூர் அங்கேரிபாளையத்தில் கிணற்றில் குதித்து வாலிபர் தற்கொலை
திருப்பூர் அங்கேரிபாளையத்தில் கிணற்றில் குதித்து வாலிபர் தற்கொலை செய்துகொண்டார்.
அனுப்பர்பாளையம்,
திருப்பூர் அங்கேரிபாளையம் ரோட்டில் உள்ள ஒரு பொது கிணற்றில் நேற்று மதியம் ஒரு ஆண் சடலம் மிதப்பதாக அனுப்பர்பாளையம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்று கிணற்றில் பிணமாக கிடந்தவரின் உடலை மீட்டு விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் கிணற்றில் பிணமாக கிடந்தவர் அங்கேரிபாளையத்தை அடுத்த நெட்டுச்சாலை பகுதியை சேர்ந்த சிவலிங்கம் என்பவரின் மகன் வினோத்குமார் (வயது 29) என்பது தெரியவந்தது. மேலும் அவர் அந்த பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் தையல் தொழிலாளியாக வேலை பார்த்து வந்ததும், கடந்த ஒரு வாரமாக வினோத்குமார் கடுமையான மன உளைச்சலுடன் காணப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த வினோத்குமார் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து இருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர். இது குறித்து அனுப்பர்பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.