தொடர் மழை எதிரொலி: கிருஷ்ணகிரி, கெலவரப்பள்ளி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு


தொடர் மழை எதிரொலி: கிருஷ்ணகிரி, கெலவரப்பள்ளி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு
x
தினத்தந்தி 20 May 2018 11:00 PM GMT (Updated: 2018-05-21T03:16:04+05:30)

தொடர் மழை எதி ரொலியால் கிருஷ்ணகிரி, கெலவரப்பள்ளி அணை களுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனாலும் தென்பெண்ணை ஆற்றின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை எதிரொலியால் கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணை மற்றும் ஓசூர் கெலவரப்பள்ளி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஓசூர் கெலவரப்பள்ளி அணையின் முழு கொள்ளளவு 44.28 அடியாகும். தற்போது 42.31 அடி தண்ணீர் உள்ளது. அணைக்கு வரக்கூடிய 480 கனஅடி தண்ணீரும், அப்படியே தென்பெண்ணை ஆற்றில் திறந்து விடப்படுகிறது.

தண்ணீர் திறக்க வாய்ப்பு

இதே போல கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணையின் முழு கொள்ளளவு 42 அடியாகும். அதில் தற்போது 42 அடியை தாண்டி தண்ணீர் இருப்பதால் அணைக்கு வினாடிக்கு வரக்கூடிய 453 கனஅடி தண்ணீரும் அப்படியே திறந்து விடப்படுகிறது. இதனால் தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து செல்கிறது. தொடர்ந்து மழை பெய்யும் பட்சத்தில் 2 அணைகளுக்கு வரக்கூடிய நீரின் வரத்து அதிகரிக்கும் என்றும், அதனால் கூடுதலாக தண்ணீர் திறக்க வாய்ப்பு உள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது. 

Next Story