பெட்டிகாளி அம்மன் பல்லக்கு வீதிஉலா புறப்பாடு 3 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்றது


பெட்டிகாளி அம்மன் பல்லக்கு வீதிஉலா புறப்பாடு 3 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்றது
x
தினத்தந்தி 20 May 2018 10:30 PM GMT (Updated: 2018-05-21T03:16:06+05:30)

கொரநாட்டுகருப்பூர் பெட்டிகாளி அம்மன் பல்லக்கு வீதி உலா புறப்பாடு 3 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்றது.

கும்பகோணம்,

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே கொரநாட்டு கருப்பூர் சுந்தரேஸ்வர சாமி கோவிலில் 3 ஆண்டுகளுக்கு பிறகு பெட்டிகாளி அம்மன் பல்லக்கு வீதிஉலா புறப்பாடு நேற்று நடைபெற்றது. சோழ மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்ட இந்த கோவில் சுமார் 1500 ஆண்டுகள் பழமையானது. அபிராமிஅம்மன் சுந்தரேஸ்வரர் கோவிலில் உள்ள பெட்டிகாளியம்மன் காவிரி ஆற்றில் மிதந்து வந்ததாக கூறப்படுகிறது.

பல்லக்கு புறப்பாடு

இந்த கோவிலில் ஆண்டுக்கொரு முறை பல்லக்கு புறப்பாடு நடைபெறுவது வழக்கம். காளியின் இடுப்புக்கு மேலே உள்ள உருவம் மட்டும் சிரசு வரைதான் வழிபாட்டில் உள்ளது. இந்த கோவிலில் அம்மனுக்கு அணிவிக்கப்பட்ட பூ, எலுமிச்சம் பழம், மாலை மற்றும் விபூதி, குங்குமம் போன்றவை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுவதில்லை. அம்மன் வீதி உலா புறப்பாட்டுக்கு முன் அம்மனுக்கு பிரமாண்டமான உணவுப்படையல் போடப்படுகிறது. கடந்த 3 ஆண்டுகளாக கோவிலில் திருப்பணி வேலைகள் செய்யப்பட்டதால் பல்லக்கு புறப்பாடு நடக்கவில்லை. இந்தநிலையில் நேற்று மதியம் 2.30 மணிக்கு பல்லக்கு புறப்பாடு நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கொரநாட்டு கருப்பூர் கிராம மக்கள் செய்து உள்ளனர். 

Next Story