நேபாளம் வழியாக கடத்தப்பட்ட ரூ.2 கோடி தங்கத்துடன் 4 பேர் கைது
துபாயில் இருந்து நேபாளம் வழியாக தங்கம் கடத்தி வந்த 4 பேர் கைது செய்யப்பட்டனர். மும்பை ரெயில் நிலையத்தில் அவர்கள் சிக்கினர்.
மும்பை,
இதையடுத்து மும்பை லோக்மான்யா திலக் (எல்.டி.டி.) டெர்மினஸ் சென்ற அதிகாரிகள் சம்பவத்தன்று பாடலிபுத்ரா எக்ஸ்பிரசில் வந்து இறங்கிய ஹபிப், சர்புதீன், மன்சூர், ஜாபர் ஆகிய 4 பேரை ரூ.2 கோடி மதிப்பிலான 7 கிலோ தங்கத்துடன் பிடித்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில், பிடிபட்டவர்களில் 2 பேர் துபாயில் இருந்து விமானம் மூலம் நேபாளத்திற்கு தங்கத்தை கடத்தி வந்துள்ளனர். பின்னர் அவர்கள் நேபாளத்தை சேர்ந்த 2 பேருரின் உதவியுடன் போலி ஆவணங்களை காட்டி இந்திய எல்லைக்குள் நுழைந்துள்ளனர். இதைதொடர்ந்து அவர்கள் பாட்னாவில் இருந்து மும்பைக்கு ரெயிலில் வந்தது தெரியவந்துள்ளது.இதையடுத்து 4 பேரையும் கைது செய்த அதிகாரிகள் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். விமானநிலையத்தில் கெடுபிடிகள் அதிகமாக இருப்பதால் கடத்தல்காரர்கள் நேபாளம் வழியாக தங்கம் கடத்தி வந்துள்ளது சுங்க அதிகாரிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story