விபத்தில் இறந்தவரின் உடலை பிரேத பரிசோதனை செய்ய தாமதமானதை கண்டித்து சாலை மறியல்
விபத்தில் இறந்தவரின் உடலை பிரேத பரிசோதனை செய்ய தாமத மானதை கண்டித்து துறையூரில் இறந்தவரின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
துறையூர்,
திருச்சி மாவட்டம் துறையூரை சேர்ந்தவர் சத்யேந்திரன் (வயது 41). இவர் தனியார் ஓட்டலில் கார் டிரைவராக வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் துறையூரை அடுத்துள்ள மருவத்தூருக்கு தனது உறவினர் திருமணத்திற்கு சென்று விட்டு மீண்டும் துறையூருக்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.
துறையூர் சிவன் கோவில் அருகில் வந்த போது, கோவில் பின்புற சாலையில் இருந்து அம்மாபாளையத்தை சேர்ந்த நடராஜன் ( 26), அவருடைய நண்பர் லட்சுமணன் ஆகியோர் வந்த மோட்டார் சைக்கிளும், சத்யேந்திரன் ஓட்டிவந்த மோட்டார் சைக்கிளும் மோதி கொண்டன.
இந்த விபத்தில் படுகாயம் அடைந்த சத்யேந்திரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். நடராஜன், லட்சுமணன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். இந்த விபத்து தொடர்பாக துறையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று துறையூர் அரசு மருத்துவமனையில் சத்யேந்திரனின் உடலை பிரேத பரிசோதனை செய்ய தாமதம் ஆனது. இதை கண்டித்து சத்யேந்திரனின் உறவினர்கள் துறையூர் அரசு மருத்துவமனை முன்புள்ள பெரம்பலூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். மேலும் சத்யேந்திரன் மீது தவறாக வழக்குப்பதிவு செய்யப் பட்டுள்ளது என்று குற்றம் சாட்டினர்.
இந்த மறியல் காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த துறையூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மனோகரன், சப்-இன்ஸ்பெக்டர் ஹாரூன் மற்றும் போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். உடலை விரைவாக பிரேத பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் கூறியதையடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
அதன்பின் போலீசார் போக்குவரத்தை சீர் செய்தனர். சத்யேந்திரனின் உடலும் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. மறியல் போராட்டம் காரணமாக அந்த பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Tags :
Next Story