பரமேஸ்வருக்கு துணை முதல்–மந்திரி பதவி? காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் பெங்களூருவில் நடந்தது
பெங்களூருவில், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடந்தது. பரமேஸ்வருக்கு துணை முதல்–மந்திரி பதவி கிடைக்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
பெங்களூரு,
பெங்களூருவில், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடந்தது. பரமேஸ்வருக்கு துணை முதல்–மந்திரி பதவி கிடைக்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
ராஜினாமா செய்வோம்கர்நாடக காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் நேற்று நடைபெற்றது. சித்தராமையா தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மேலிட பொறுப்பாளர் வேணுகோபால் உள்பட முன்னணி நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டனர்.
இதில் பேசிய பாகல்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள், “எஸ்.ஆர்.பட்டீல், ஆர்.பி.திம்மாப்பூர் ஆகியோர் எங்களை தோற்கடிக்க முயற்சி செய்தனர். அதனால் அவர்களுக்கு எந்த பதவியும் வழங்கக்கூடாது. சித்தராமையாவை தோற்கடிக்கவும் அவர்கள் திட்டமிட்டு செயல்பட்டனர். அவர்களுக்கு ஏதாவது பதவி வழங்கினால் நாங்கள் அனைவரும் பதவியை ராஜினாமா செய்வோம்“ என்றனர்.
சபாநாயகர் பதவிஇந்த கூட்டம் முடிந்த பிறகு கே.எச்.முனியப்பா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், “நாளை(அதாவது இன்று) குமாரசாமி முதல்–மந்திரியாக பதவி ஏற்கிறார். அவருடன் எங்கள் கட்சியை சேர்ந்த ஒருவர் மந்திரியாக பதவி ஏற்கிறார். மற்றவர்கள் பிறகு பதவி ஏற்பார்கள். சபாநாயகர் பதவி, காங்கிரஸ் கட்சிக்கு கிடைக்கிறது. சபாநாயகர் யார் என்பதை ஆலோசித்து தேர்ந்தெடுப்போம்“ என்றார். மாநில காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வர் துணை முதல்–மந்திரியாக பதவி ஏற்பார் என்று கூறப்படுகிறது.