முதல்–மந்திரியாக இன்று குமாரசாமி பதவி ஏற்பு காங்கிரஸ்– ஜனதாதளம்(எஸ்) கூட்டணி குறித்து மைசூரு மக்களின் கருத்து
முதல்–மந்திரியாக இன்று குமாரசாமி பொறுப்பு ஏற்க உள்ள நிலையில் காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கூட்டணி குறித்து மைசூரு மக்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.
மைசூரு,
முதல்–மந்திரியாக இன்று குமாரசாமி பொறுப்பு ஏற்க உள்ள நிலையில் காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கூட்டணி குறித்து மைசூரு மக்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.
குமாரசாமி பதவி ஏற்புகர்நாடகத்தின் புதிய முதல்–மந்திரியாக குமாரசாமி இன்று (புதன்கிழமை) பொறுப்பு ஏற்க உள்ளார். இந்த நிலையில் காங்கிரஸ்– ஜனதாதளம்(எஸ்) கூட்டணி குறித்து மைசூரு நகர பொதுமக்கள் தங்களின் கருத்துகளை தெரிவித்து உள்ளனர். அதுபற்றி விரிவாக கீழே காண்போம்:–
வக்கீல் முத்துமாதய்யா1. சமூக ஆர்வலர் சோமய்யா கூறுகையில், காங்கிரஸ்– ஜனதாதளம்(எஸ்) கூட்டணி அமைத்து ஆட்சி நடத்த உள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. தனிப்பெரும்பான்மையை நிரூபிக்க முடியாததால் எடியூரப்பா முதல்–மந்திரி பதவியை ராஜினாமா செய்தார். இது ஜனநாயகத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி. பா.ஜனதா கட்சி ஆட்சி அமைப்பதை தடுக்க இவர்கள் கூட்டணி அமைத்து உள்ளனர். இது நாட்டிற்கு நல்லது என்றார்.
2. மைசூரு மாவட்ட சிவில் கோர்ட்டு வக்கீலான முத்துமாதய்யா கூறுகையில், காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகள் இணைந்து ஆட்சி நடத்துவது நல்ல விஷயம். அவர்கள் நல்லாட்சி கொடுப்பார்கள், முன்னாள் முதல்–மந்திரி சித்தராமையா எடுத்த முடிவால் குமாரசாமிக்கு முதல்–மந்திரி பதவி கிடைத்து உள்ளது. மதசார்பற்ற கட்சிகள் இணைந்து ஆட்சி நடத்தினால் ஊழல் நடக்காது என்று நான் கருதுகிறேன். குமாரசாமிக்கு வாழ்த்துக்கள் என்றார்.
சமூக ஆர்வலர் லட்சுமி நாராயணா3. சமூக ஆர்வலரான லட்சுமி நாராயணா கூறுகையில், மதவாதம் மற்றும் இந்துத்துவாவிற்கு இடம் கொடுக்கும் பா.ஜனதா அரசுக்கு கால அவகாசம் கொடுக்காமல் சுப்ரீம் கோர்ட்டு அதிரடி தீர்ப்பு எடுத்தது நல்லது. இதன் மூலம் நாட்டின் ஜனநாயகம் காப்பாற்றப்பட்டு உள்ளது. குமாரசாமி மாநில மக்களுக்கு நல்லாட்சி கொடுப்பார் என்றார்.
4. ஓய்வுபெற்ற மருத்துவரான சந்திரசேகர் கூறும்போது, குமாரசாமி முதல்–மந்திரி ஆவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். இவர் மக்களுக்கு கண்டிப்பாக நல்லது செய்வார். காங்கிரசுடன் இணைந்து ஆட்சி நடத்துவதால் குமாரசாமி அரசுக்கு யானை பலம் கிடைத்து உள்ளது.
இல்லத்தரசி சவுமியா5. பா.ஜனதா பிரமுகரான அனந்தராமன் கூறுகையில், இந்த கூட்டணி அரசு புனிதமானது அல்ல. இந்த அரசு அதிக நாட்கள் நீடிக்காது. இந்த அரசு விரைவில் வீழ்ந்து விடும். பா.ஜனதா மீண்டும் ஆட்சியை பிடிப்பது நிச்சயம்.
6. குவெம்பு நகரை சேர்ந்த இல்லத்தரசியான சவுமியா கூறும்போது, காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கூட்டணி 5 ஆண்டுகள் நீடிக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. தேர்தலுக்கு முன்பு 2 கட்சியினரும் வார்த்தை போரில் ஈடுபட்டனர். ஆனால் தற்போது பதவி ஆசைக்காக அவர்கள் இணைந்து உள்ளனர் என்பது போல தெரிகிறது.
மகளிர் சங்க தலைவி ஜெயலட்சுமி7. மகளிர் சங்க தலைவியான ஜெயலட்சுமி கூறுகையில், ஜனதாதளம்(எஸ்)–காங்கிரஸ் கூட்டணி அமைத்து ஆட்சியை நடத்துவது நல்ல விஷயம். சித்தராமையாவுக்கு முதல்–மந்திரி பதவியும், குமாரசாமிக்கு துணை முதல்–மந்திரி பதவியும் கொடுத்து இருக்கலாம். சித்தராமையா ஆட்சி நடத்திய போது பல்வேறு நலத்திட்டங்களை அறிமுகப்படுத்தினார்.
8. வக்கீல் கிருஷ்ணப்பா கூறுகையில், சுப்ரீம் கோர்ட்டு ஜனநாயகத்தை காப்பாற்றியுள்ளது. கூட்டணி அரசால் ஊழலை தடைசெய்யலாம். மக்கள் பிரச்சினைகளை தீர்த்து நல்லது செய்யலாம் என்றார்.
9. ஜனதாதளம்(எஸ்) பிரமுகர் ராஜண்ணா கூறுகையில், குமாரசாமி நல்லாட்சியை நடத்துவார். விவசாயிகளுக்கு சாதகமாக வேலை செய்வார். 20 மாதங்கள் அவர் ஆட்சி செய்ததை மக்கள் ஏற்கனவே பார்த்து உள்ளனர். அவர் இந்த நாட்டிற்கும், மாநிலத்திற்கும் பெருமை சேர்ப்பார்.