12-ம் வகுப்பு வரை ஆங்கில வழி கல்வி கொண்டுவர வேண்டும் மாணவ- மாணவிகள் கோரிக்கை
குளித்தலை நகராட்சி பகுதியில் 12-ம் வகுப்பு வரை ஆங்கில வழி கல்வி கொண்டுவர வேண்டும் என்று பெற்றோர், மாணவ- மாணவிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குளித்தலை,
தமிழகத்தில் தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளி மாணவ- மாணவிகளின் கல்வித்திறன் மேம்படவேண்டும் என்று, மறைந்த முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதா தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் ஆங்கில வழி கல்வி கற்கும் முறையை தொடங்கினார். இதையடுத்து கடந்த 2012- 2013-ம் கல்வி ஆண்டு முதல் தமிழகத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகளில் 6 முதல் 10-ம் வகுப்பு வரை ஆங்கில வழியிலும் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. கரூர் மாவட்டத்தில் சுமார் 50-க்கும் மேற்பட்ட அரசு ஆண்கள், பெண்கள் மேல்நிலைப்பள்ளிகள் உள்ளன. இதில் கரூர் நகராட்சியில் உள்ள ஒரு அரசு மேல்நிலைப்பள்ளியில் மட்டுமே 6 முதல் 12-ம் வகுப்பு வரை ஆங்கில வழியிலும் கல்வி கற்பிக்கப்பட்டு இதற்கென தனி வகுப்புகள் உள்ளன. ஆனால் இப்பள்ளியை தவிர வேறு எந்த பள்ளியிலும் 12-ம் வகுப்பு வரை ஆங்கில மொழியில் கல்வி கற்பிக்கும் வகுப்புகள் இல்லை. கரூர் மாவட்டத்தில் கரூர் நகராட்சிக்கு அடுத்து குளித்தலை நகராட்சி உள்ளது. இங்கு அரசு ஆண்கள், பெண்கள் மேல்நிலைப்பள்ளிகள் என 2 பள்ளிகள் உள்ளன. இந்த 2 பள்ளிகளிலும் 6 முதல் 10-ம் வகுப்பு வரை மட்டுமே ஆங்கில மொழியில் கல்வி கற்பிக்கும் வகுப்புகள் உள்ளன.
12-ம் வகுப்பு வரை...
இதனால் 10-ம் வகுப்பு முடித்த மாணவ- மாணவிகள் தங்கள் மேற்படிப்பை தொடர அதிக கட்டணம் செலுத்தி தனியார் பள்ளிகளில் சேரவேண்டிய அவலநிலை உள்ளது. குறிப்பிட்ட சிலர் மட்டுமே தனியார் பள்ளிகளில் தங்கள் பிள்ளைகளை சேர்த்து படிக்க வைக்கின்றனர். பொருளாதார வசதி இல்லாத பெற்றோர்களின் பிள்ளைகள் 10-ம் வகுப்பு வரை ஆங்கில மொழி வழியில் படித்திருந்தாலும், 11-ம் வகுப்பிற்கு செல்லும்போது தமிழ் மொழி வழியிலேயே கல்வி கற்கவேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இதனால் மனதளவில் மாணவ- மாணவிகளும், அவர்களின் பெற்றோர்களும் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே ஏழை மாணவ- மாணவிகளின் கல்வி நலனை கருத்தில் கொண்டு நடப்பு கல்வி ஆண்டு முதலே கூடுதலாக ஆசிரியர்களை நியமனம் செய்து குளித்தலை நகராட்சி பகுதியில் உள்ள அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் ஆகிய 2 மேல்நிலைப்பள்ளிகளிலாவது 12-ம் வகுப்பு வரை ஆங்கில வழி கல்வி வகுப்புகளை தொடங்க தமிழக அரசு, பள்ளிக்கல்வி துறை மூலம் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று மாணவ- மாணவிகள், பெற்றோர், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Tags :
Next Story