ஜே.ஜே. அரசு ஆஸ்பத்திரியில் 4-வது நாளாக பயிற்சி டாக்டர்கள் வேலை நிறுத்தம் சிகிச்சை கிடைக்காமல் நோயாளிகள் பரிதவிப்பு


ஜே.ஜே. அரசு ஆஸ்பத்திரியில் 4-வது நாளாக பயிற்சி டாக்டர்கள் வேலை நிறுத்தம் சிகிச்சை கிடைக்காமல் நோயாளிகள் பரிதவிப்பு
x
தினத்தந்தி 23 May 2018 4:45 AM IST (Updated: 23 May 2018 3:48 AM IST)
t-max-icont-min-icon

மும்பை ஜே.ஜே. அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருந்த நோயாளி ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மும்பை, 

மும்பை ஜே.ஜே. அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருந்த நோயாளி ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த அவரது உறவினர்கள் பணியில் இருந்த பயிற்சி டாக்டர்கள் 2 பேரை தாக்கினர். 

இந்த சம்பவத்தை கண்டித்தும், டாக்டர்களுக்கு பணியின் போது உரிய பாதுகாப்பு வழங்க வலியுறுத்தியும் பயிற்சி டாக்டர்கள் தொடர் வேலை நிறுத்தம் செய்து வந்தனர். அவர்களுக்கு ஆதரவாக சயான் மாநகராட்சி மருத்துவமனையில் பணிபுரிந்து வரும் பயிற்சி டாக்டர்களும் நேற்றுமுன்தினம் ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

இந்தநிலையில், ஜே.ஜே. அரசு ஆஸ்பத்திரியில் பயிற்சி டாக்டர்களின் வேலை நிறுத்தம் நேற்று 4-வது நாளாக நீடித்தது. அவர்கள் ஆஸ்பத்திரியில் அமர்ந்து பாதுகாப்பு கோரும் பதாகைகளை ஏந்தியபடி போராட்டத்தில் ஈடுபட்டனர். 

பயிற்சி டாக்டர்களின் தொடர் வேலை நிறுத்தத்தால் புறநோயாளிகள் பாதிக்கப்பட்டனர். இதற்கிடையே நேற்று இரவு மந்திரி கிரித் மகாஜன் மற்றும் ஜே.ஜே. ஆஸ்பத்திரி அதிகாரிகள், போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பயிற்சி டாக்டர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதாக மத்திரி உறுதியளித்தார். இதையடுத்து பயிற்சி டாக்டர்கள் தங்கள் வேலை நிறுத்த போராட்டத்தை கைவிட்டனர்.


Next Story