சிக்னலை மீறுவதை தடுக்க மின்சார ரெயில்களில் மோட்டார்மேன் கேபினில் அலாரம் மத்திய ரெயில்வே நடவடிக்கை


சிக்னலை மீறுவதை தடுக்க மின்சார ரெயில்களில் மோட்டார்மேன் கேபினில் அலாரம் மத்திய ரெயில்வே நடவடிக்கை
x
தினத்தந்தி 23 May 2018 4:11 AM IST (Updated: 23 May 2018 4:11 AM IST)
t-max-icont-min-icon

சிக்னலை மீறுவதை தடுக்க மின்சார ரெயில்களில் மோட்டார்மேன் கேபினில் மத்திய ரெயில்வே அலாரம் பொருத்துகிறது.

மும்பை, 

சிக்னலை மீறுவதை தடுக்க மின்சார ரெயில்களில் மோட்டார்மேன் கேபினில் மத்திய ரெயில்வே அலாரம் பொருத்துகிறது.

சிக்னலை மீறும் மின்சார ரெயில்கள்

மும்பை பெருநகரத்தில் மின்சார ரெயில் சேவை மக்களின் போக்குவரத்து உயிர்நாடியாக விளங்குகிறது. மின்சார ரெயில்கள் சிக்னல்களை மீறி செல்லும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன.

அண்மையில் சி.எஸ்.எம்.டி. அருகிலும், சென்ற 14-ந்தேதி குர்லா அருகேயும், கடந்த மாதம் 21-ந்தேதி வித்யாவிகாரிலும் மின்சார ரெயில்கள் சிக்னலை மீறிச்சென்றன.

ரெயில் விபத்துக்கான அபாய காரணியாக பார்க்கப்படும் இந்த சம்பவங்கள் தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.

அலாரம்

இந்தநிலையில், மின்சார ரெயில்கள் சிக்னலை மீறி செல்வதை தடுக்க மோட்டார்மேன் கேபினில் அலாரம் பொருத்த மத்திய ரெயில்வே நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. மின்சார ரெயிலில் உள்ள ஆக்ஸில்லரி வார்னிங் தொழில்நுட்பத்தின் உதவியுடன் ஒலிக்கும் வகையில் இந்த அலாரம் வைக்கப்படுகிறது.

அதாவது, வேகமாக மின்சார ரெயில் செல்லும் போது சிக்னலில் சிவப்பு விளக்கு எரிந்து கொண்டிருக்கும் பட்சத்தில் ஆக்ஸில்லரி வார்னிங் தொழில்நுட்பத்தின் மூலம் சிக்னலை நெருங்குவதற்கு முன்னதாகவே அலாரம் ஒலிக்க தொடங்கி விடும்.

இதன் மூலம் மோட்டார்மேன் சிக்னலை கவனிக்க தவறினாலும் சுதாரித்து கொண்டு உடனடியாக ரெயிலின் வேகத்தை குறைத்து நிறுத்த முடியும்.

மின்சார ரெயிலில் மோட்டார்மேன் கேபினில் அலாரம் பொருத்தும் இந்த திட்டத்துக்கு நேற்றுமுன்தினம் மத்திய ரெயில்வே ஒப்புதல் அளித்தது.


Next Story