நாக்பூரில், காதல் தகராறில் வாலிபர் அடித்து கொலை; 2 பேர் படுகாயம் கும்பல் வெறிச்செயல்


நாக்பூரில், காதல் தகராறில் வாலிபர் அடித்து கொலை; 2 பேர் படுகாயம் கும்பல் வெறிச்செயல்
x
தினத்தந்தி 23 May 2018 4:18 AM IST (Updated: 23 May 2018 4:18 AM IST)
t-max-icont-min-icon

நாக்பூரில் காதல் தகராறில் வாலிபர் அடித்துக்கொலை செய்யப்பட்டார். மேலும் இந்த தாக்குதலில் 2 பேர் படுகாயமடைந்தனர்.

நாக்பூர், 

நாக்பூரில் காதல் தகராறில் வாலிபர் அடித்துக்கொலை செய்யப்பட்டார். மேலும் இந்த தாக்குதலில் 2 பேர் படுகாயமடைந்தனர். இது தொடர்பாக போலீசார் 3 பேரை கைது செய்தனர்.

காதல் பிரச்சினை

நாக்பூர் மாவட்டம் ராம் சுமேர்பாபா நகரை சேர்ந்த வாலிபர் நிகில் திகம்பர் மேஷ்ரம்(வயது29). இவரது தம்பி அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்தார்.

ஆனால் இந்த காதலுக்கு அந்த பெண்ணின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இது தொடர்பாக அவர்கள் அந்த வாலிபருக்கு கொலை மிரட்டல் விடுத்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

அடித்து கொலை

இந்தநிலையில் சம்பவத்தன்று அந்த பெண்ணின் குடும்பத்தினர் 20-க்கும் மேற்பட்டோர் கத்தி, இரும்பு கம்பி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் மற்றும் மிளகாய் பொடியுடன் நிகில் திகம்பர் மேஷ்ரமின் வீட்டுக்குள் புகுந்தனர். இதையடுத்து அவர்கள் அங்கிருந்த நிகில் திகம்பர் மேஷ்ரம், அவரது மனைவி மற்றும் தம்பியை சரமாரியாக தாக்கத் தொடங்கினர்.

இதில் தலையில் பலத்த காயம் அடைந்த நிகில் திகம்பர் மேஷ்ரம் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். அவரது மனைவி மற்றும் தம்பி படுகாயமடைந்தனர். இதைத்தொடர்ந்து அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச்சென்றது.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் கொலை தொடர்பாக 3 பேரை கைது செய்தனர். மேலும் தம்பிஓடியவர்களை தேடிவருகின்றனர்.


Next Story