தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து தக்கலையில் தி.மு.க. ஆர்ப்பாட்டம்


தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து தக்கலையில் தி.மு.க. ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 24 May 2018 4:30 AM IST (Updated: 23 May 2018 10:45 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து தக்கலையில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தக்கலை,

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் கலவரம் வெடித்ததால் தூத்துக்குடி நகரமே போர்க்களம் ஆனது. போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 11 பேர் பலியானார்கள்.

பொதுமக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய போலீஸ் மற்றும் தமிழக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகிறது.

குமரி மாவட்டத்திலும் போலீசாரின் நடவடிக்கையை கண்டித்து போராட்டம் நடைபெற்றது. மேற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் தக்கலையில் உள்ள கல்குளம் தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்திற்கு மேற்கு மாவட்ட செயலாளர் மனோ தங்கராஜ் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். பத்மநாபபுரம் நகர செயலாளர் மணி முன்னிலை வகித்தார். குழித்துறை நகர செயலாளர் துணை செயலாளர் ஐ.ஜி.பி. ஜாண் கிறிஸ்டோபர், முன்னாள் அமைச்சர் லாரன்ஸ், குழித்துறை நகர செயலாளர் பொன்.ஆசைதம்பி, மாநில சட்டத்துறை செயலாளர் வக்கீல் தினேஷ், தொண்டரணி அமைப்பாளர் ஜெரோம் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர். போராட்டத்தின் போது தூத்துக்குடியில் பொதுமக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய போலீசாரையும், அரசையும் கண்டித்து கோ‌ஷங்களை எழுப்பினார்கள்.


Next Story