துப்பாக்கி சூட்டுக்கு கண்டனம் தெரிவித்து கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
துப்பாக்கி சூட்டுக்கு கண்டனம் தெரிவித்து கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கரூர்,
தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து வெளியேற்றப்படும் நச்சுப்புகையால் பொதுமக்களுக்கு புற்றுநோய் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுவதாகவும், அந்த ஆலையை நிரந்தரமாக மூடக்கோரியும் பொது மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்திற்கு போராட்டக்காரர்கள் ஊர்வலமாக சென்றனர்.
அப்போது அவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே திடீரென கலவரம் ஏற்பட்டது. இதில் காவல் துறையினர் துப்பாக்கி சூடு நடத்தியதில் போராட்டக்காரர்கள் 10-க்கும் மேற்பட்டோர் இறந்தனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. காவல்துறைக்கும், அரசுக்கும் எதிராக பல்வேறு தரப்பினரிடமிருந்து எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.
அந்த வகையில் ஸ்டெர்லைட் போராட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிசூடு சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து கம்யூனிஸ்டு கட்சிகள் சார்பில் கரூர் பஸ்நிலையம் அருகேயுள்ள ஆர்.எம்.எஸ். அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் கந்தசாமி தலைமை தாங்கினார். இந்திய கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் சிங்காரவேலன், சேஷன் ஆகியோர் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியதன் பின்னணி என்ன? என்பது பற்றி விளக்கி கூறினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, ஜாலியன்வாலாபாக் படுகொலை போன்ற மோசமான நிகழ்வினை தூத்துக்குடியில் காவல்துறையை ஏவி விட்டு தமிழக அரசு மேற்கொண்டிருக்கிறது. 100 நாட்களுக்கும் மேலாக ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி போராட்டம் நடந்து வருவதை அறிந்தும் உரிய பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணாமல் அரசு மவுனம் காத்தது ஏன்? என்பது தெரியவில்லை. அதை விடுத்து பேரணியாக சென்ற போராட்டக்காரர்களை காக்கா-குருவியை சுடுவது போல் சுட்டு கொலை செய்ததற்கு முழுபொறுப்பினை அரசு தான் ஏற்க வேண்டும். இந்த சம்பவம் குறித்து உரிய முறையில் நீதி விசாரணை நடத்தப்பட்டு சம்பந்தப்பட்ட காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த நாசகார ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டக்காரர்கள் பேசினர்.
முன்னதாக ஸ்டெர்லைட் போராட்டத்தில் உயிர்நீத்தவர்களுக்கு கம்யூனிஸ்டு கட்சியினர் மவுன அஞ்சலி செலுத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில், சந்திரசேகரன், பால்ராஜ், சண்முகம், ராஜன், ராஜூ, ஜீவானந்தம் உள்பட கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இதே போல், கரூர் மாவட்ட சுயஆட்சி இந்தியா கட்சி சார்பில் கரூர் தாசில்தார் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு அகில இந்திய தலைமை குழு நிர்வாகி கிருஷ்ணசாமி தலைமை தாங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, ஸ்டெர்லைட் துப்பாக்கி சூட்டில் இடுப்புக்கு மேல் குறிவைத்துதான் பெரும்பாலானோர் சுடப்பட்டுள்ளனர். இது சட்டத்தை மீறிய செயல் ஆகும். எனவே இதற்கு காவல்துறையும், அரசும் தான் பொறுப்பேற்க வேண்டும். இனி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என வலியுறுத்தினர். மேலும் கரூர் மனோகரா ரவுண்டானா உள்ளிட்ட பகுதிகளில், ஸ்டெர்லைட் ஆலை போராட்டத்தில் உயிர்நீத்தவர்களின் படங்களுக்கு மாலை அணிவித்து இளைஞர்கள் பலர் அஞ்சலி செலுத்தியதை காண முடிந்தது.

Related Tags :
Next Story