2-வது நாளாக அஞ்சல் ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்


2-வது நாளாக அஞ்சல் ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்
x
தினத்தந்தி 23 May 2018 10:45 PM GMT (Updated: 2018-05-24T01:39:13+05:30)

திருத்துறைப்பூண்டியில் 2-வதுநாளாக அஞ்சல் ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருத்துறைப்பூண்டி,

அஞ்சல் துறை ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கையான ஜி.டி.எஸ். கமிட்டி அறிக்கையை அமல்படுத்த வேண்டும். தொழிற்சங்க உறுப்பினர் சரிபார்ப்பை உடனே வெளியிட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி, திருத்துறைப்பூண்டியில் நேற்று 2-வதுநாளாக அஞ்சல் ஊழியர்கள் கால வரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து திருத்துறைப்பூண்டி தலைமை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு போராட்டக்குழு தலைவர் மனோகரன் தலைமை தாங்கினார். துணை செயலாளர் இளவரசன், கிராம அஞ்சலக ஊழியர்கள் சங்க செயலாளர் கிருஷ்ணன், தபால் ஊழியர்கள் சங்க செயலாளர் தமிழரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் அஞ்சல் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

மன்னார்குடி

இதேபோல் மன்னார்குடி தலைமை தபால் நிலையம் எதிரில் தபால் ஊழியர்கள் 2-வது நாளாக நேற்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். 

Next Story