கோவை மாநகராட்சி பள்ளிகளில் 89.63 சதவீத மாணவர்கள் தேர்ச்சி


கோவை மாநகராட்சி பள்ளிகளில் 89.63 சதவீத மாணவர்கள் தேர்ச்சி
x
தினத்தந்தி 23 May 2018 10:45 PM GMT (Updated: 2018-05-24T01:45:27+05:30)

கோவை மாநகராட்சி பள்ளிகளில் 89.63 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். இதில் 2 பள்ளிகளில் மட்டுமே அனைத்து மாணவர்களும் தேர்வு பெற்றுள்ளனர். மாநகராட்சி பள்ளிகளில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 3 சதவீதம் தேர்ச்சி குறைந்துள்ளது.

கோவை

கோவை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் 27 பள்ளிகள் உள்ளன. அதில் ஆயிரத்து 890 மாணவ-மாணவிகள் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதினார்கள். அவர்களில் 555 மாணவிகளும், ஆயிரத்து 139 மாணவிகளும் ஆக மொத்தம் ஆயிரத்து 694 பேர் தேர்வானார்கள். தேர்ச்சி சதவீதம் 89.63 ஆகும்.

கடந்த ஆண்டு மாநகராட்சி பள்ளி மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் 92.71. கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் 3.08 சதவீதம் தேர்ச்சி குறைவாகும். மாநகராட்சி பள்ளியில் மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் 82.22. மாணவிகளின் சதவீதம் 93.74. எனவே மாணவர்களை விட மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த ஆண்டு 2 பள்ளிகளில் மட்டுமே மாணவர்கள் 100 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

கோவை மாநகராட்சியில் உள்ள ஒவ்வொரு பள்ளியிலும் இந்த ஆண்டு தேர்ச்சி சதவீதம் மற்றும் கடந்த ஆண்டு தேர்ச்சி சதவீதம் (அடைப்புக்குறிக்குள்) கொடுக்கப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-

கோவை ராமலிங்கம் காலனி மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி-100(100), வரதராஜபுரம் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி-100(87.50). அரங்கநாதபுரம் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி-98.68(98.53), ராமகிருஷ்ணாபுரம் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி-98.46(96.99), சித்தாபுதூர் மாநகராட்சி பெண்கள் உயர்நிலைப்பள்ளி-97.87(95), குப்பக்கோணாம்புதூர் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி-97.06(88.24), ஒப்பணக்காரவீதி மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி-96.98(99.63), உடையாம்பாளையம் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி-96.61(100), பாப்பநாயக்கன்புதூர் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி-95.89(95.24), கோவில்மேடு மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி-95.83(100).

எஸ்.ஆர்.பி. அம்மணியம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி-95.24(97.90), ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி இருபாலர் மேல்நிலைப்பள்ளி-95.12(93.94), அனுப்பர்பாளையம் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி- 94.74(97.30), ஆர்.எஸ்.புரம் மேற்கு மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி-94.41 (96.93), வடகோவை மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி-94 (85.37), மணியகாரன்பாளையம் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி-90.11(89.77), செல்வபுரம் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி-88.89(100), செல்வபுரம் மாநகராட்சி பெண்கள் உயர்நிலைப்பள்ளி-87.04 (96.43), ஒக்கிலியர் காலனி மாநகரட்சி மேல்நிலைப்பள்ளி-84.62(92.45), ரத்தினபுரி மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி-82.22(83.85), புலியகுளம் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி-81.25 (100), ராமநாதபுரம் மாநகராட்சி இருபாலர் மேல்நிலைப்பள்ளி-80,56(81.82), வெங்கிட்டாபுரம் மாநகராட்சி பா.கமலநாதன் நினைவு மேல்நிலைப்பள்ளி- 78.79(79.45), ஆர்,எஸ்.புரம் மாநகராட்சி காது கேளாதோர் உயர்நிலைப்பள்ளி-77.78(71.43), மாநகராட்சி சிட்டி மேல்நிலைப்பள்ளி- 73.17(92.68), சித்தாபுதூர் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி-50(73.81), பீளமேடு மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி-46.81(90.48).

Next Story