மூதாட்டியின் ஏ.டி.எம். கார்டை பயன்படுத்தி ரூ.12 லட்சம் மோசடி செய்த வேலைக்கார பெண் கைது
மூதாட்டியின் ஏ.டி.எம். கார்டை பயன்படுத்தி ரூ.12 லட்சம் மோசடி செய்த வேலைக்கார பெண் கைது செய்யப்பட்டார்.
மும்பை,
மூதாட்டியின் ஏ.டி.எம். கார்டை பயன்படுத்தி ரூ.12 லட்சம் மோசடி செய்த வேலைக்கார பெண் கைது செய்யப்பட்டார்.
ரூ.12 லட்சம் மாயம்மும்பை மாட்டுங்காவை சேர்ந்த மூதாட்டி நீலிமா (வயது70). இவரது வீட்டில் கிரண் காலே (வயது25) என்ற பெண் வேலை செய்து வந்தார். நீலிமாவிற்கு பணம் தேவைப்படும் போது, அவரது ஏ.டி.எம். கார்டை பயன்படுத்தி கிரண் காலே தான் ஏ.டி.எம்.யில் இருந்து பணம் எடுத்து கொடுப்பார்.
சமீபத்தில் மூதாட்டியின் வீட்டிற்கு அவரது மகன் வந்திருந்தார். அப்போது அவர் மூதாட்டியின் வங்கிக்கணக்கு விவரங்களை பார்த்தார். அப்போது அதில் ரூ.12 லட்சம் மாயமாகி இருந்தது.
வேலைக்கார பெண் கைதுஇது குறித்து அவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது கிரண் காலே மூதாட்டியின் ஏ.டி.எம். கார்டை பயன்படுத்தி ரூ.12 லட்சத்தை அவரது வங்கிக்கணக்கில் இருந்து எடுத்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்தது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் வேலைக்கார பெண் கிரண் காலேயை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து ரூ.4 லட்சம், கார் ஒன்றை பறிமுதல் செய்தனர்.