சிவகங்கை அரசு இசைப்பள்ளியில் மாணவர் சேர்க்கை
சிவகங்கை அரசு இசைப்பள்ளியில் குரலிசை, பரதநாட்டியம், தவில், நாதசுரம் உள்ளிட்ட படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.
சிவகங்கை
தமிழ்நாடு அரசு கலை மற்றும் பண்பாட்டு துறையின்கீழ் சிவகங்கையில் மாவட்ட அரசு இசைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 2018-19-ம் கல்வி ஆண்டிற்கான மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இங்கு குரலிசை(வாய்ப்பாட்டு), பரதநாட்டியம், தவில், நாதசுரம், தேவாரம், மிருதங்கம், வயலின் உள்ளிட்ட பாடப்பிரிவுகளில் பயிற்சி அளிக்கப்படுகிறது. 12 முதல் 30 வயது வரையுள்ள மாணவர்கள் இதில் சேர்ந்துகொள்ளலாம்.
இதில் சேர விரும்பும் நபர்கள் குரலிசை, பரதநாட்டியம், தேவாரம், வயலின், மிருதங்கம் உள்ளிட்ட பாடப்பிரிவுகளில் சேர 7-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பரதநாட்டிய பிரிவில் ஆண்களும் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். தவில், நாதசுரம் ஆகிய வகுப்புகளில் சேர கல்வித்தகுதி தேவை இல்லை.
அனைத்து பாடப்பிரிவுகளுக்கும் 3 ஆண்டுகள் பயிற்சி அளிக்கப்படும். பயிற்சி கட்டணமாக ஆண்டுக்கு ரூ.152 மட்டும். பயிற்சிக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு இலவச பஸ் பயண அட்டை, கல்வி உதவித்தொகையாக மாதம் ரூ.400 மற்றும் அரசு மாணவர் விடுதி வசதி அளிக்கப்படும். எனவே இசை கல்வியில் ஆர்வம் உள்ளவர்கள் மற்றும் மாணவ-மாணவிகள் சிவகங்கை அரசு இசைப்பள்ளியில் நேரிடையாக விண்ணப்பித்து பயனடையலாம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story