கடலூரில் லாரி மோதி போலீஸ் ஏட்டு பலி


கடலூரில் லாரி மோதி போலீஸ் ஏட்டு பலி
x
தினத்தந்தி 24 May 2018 12:02 AM GMT (Updated: 2018-05-24T05:32:08+05:30)

கடலூரில் லாரி மோதி புதுச்சேரி போலீஸ் ஏட்டு பலியானார்.

கடலூர்

புதுச்சேரி மணப்பட்டு மதிகிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் கண்ணன் (வயது 55). இவர் கிருமாம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வந்தார். இவர் நேற்று முன்தினம் மோட்டார் சைக்கிளில் புதுச்சேரியில் இருந்து கடலூர் நோக்கி வந்து கொண்டிருந்தார்.

அவர் மஞ்சக்குப்பம் கடலூர்- புதுச்சேரி சாலையில் உள்ள இரும்பு கடை அருகே வந்த போது, பின்னால் வந்த லாரி அவர் மீது மோதியது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட கண்ணனை பலத்த காயங்களுடன் அக்கம், பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக புதுச்சேரி தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இது பற்றி அவருடைய மனைவி கமலவள்ளி கடலூர் புதுநகர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவர் பெரியகாரைக்காட்டை சேர்ந்த ரவிச்சந்திரன் என் பவரை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர்.

Next Story