மக்களின் உணர்வுக்கு மதிப்பளித்து ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தல்
ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்று பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தி உள்ளார்.
தூத்துக்குடி,
ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்று பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தி உள்ளார்.
ஆறுதல்தூத்துக்குடியில் நடந்த ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்தில் போலீசார் நடத்திய தடியடி மற்றும் துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்து தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுபவர்களை பிரேமலதா விஜயகாந்த் நேற்று சந்தித்து பேசினார். அப்போது அவர்களுக்கு ஆறுதல் கூறினார். பின்னர் ஆஸ்பத்திரி முன்பு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
ஆலையை மூட வேண்டும்ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்பதே தே.மு.தி.க.வின் நிலைப்பாடு. தொடர்ந்து அமைதிவழியில் போராடிய மக்கள் மீது, போலீசார் நடத்திய தாக்குதல் ஏற்கனவே திட்டமிடப்பட்டதுதான்.
போராட்டத்துக்கு எவ்வளவு மக்கள் திரளுவார்கள் என்பது உளவுத்துறை போலீசாருக்கு முன்கூட்டியே தெரியாமல் இருக்குமா?. தெரிந்து இருந்தேதான் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. எனவே இனியாவது மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.