விசைத்தறியாளர்களின் வங்கிக்கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் முதல்–அமைச்சருக்கு கோரிக்கை


விசைத்தறியாளர்களின் வங்கிக்கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் முதல்–அமைச்சருக்கு கோரிக்கை
x
தினத்தந்தி 2 Jun 2018 10:15 PM GMT (Updated: 2 Jun 2018 7:23 PM GMT)

விசைத்தறியாளர்களின் வங்கிக்கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று முதல்–அமைச்சருக்கு கோரிக்கை மனு அனுப்பி உள்ளனர்.

சுல்தான்பேட்டை,

கோவை, திருப்பூர் மாவட்டத்தில் சுமார் 2 லட்சம் விசைத்தறிகள் உள்ளன. இதில், சுல்தான்பேட்டை பகுதிகளில் உள்ள 5 ஆயிரம் தறிகளும் அடங்கும். சுல்தான்பேட்டை கோவை மாவட்டமாக இருந்தா லும் தறி தொழிலை பொருத்தவரை பல்லடம் கூலிக்குநெசவு செய்யும்விசைத்தறி உரிமையாளர்கள் சங்கத்துடன் சுல்தான்பேட்டை விசைத்தறியாளர்கள் இணைந்து செயல்பட்டு வருகின்றனர். இந்த இரண்டு லட்சம்தறிகளில் காடாத்துணி மற்றும் பாலிஸ்டர் ரகதுணிகள் உற்பத்திசெய்யப்படுகிறது. 90 சதவீதம் காடாத்துணி ரகங்களே உற்பத்தி செய்யப்படுகின்றன.

ஒவ்வொரு தறியிலும் தினமும் சராசரியாக 50 முதல் 60 மீட்டர்துணி உற்பத்தி செய்யப்படுகிறது. உற்பத்தி செய்யப்படும் துணிகள் ஈரோடு, மும்பை, கொல்கத்தா, சூரத், அகமதாபாத் உள்பட பல்வேறு இடங்களில் விற்பனை செய்யப்படுகிறது. இத்துணிகள் சாயமேற்றப்பட்டு போர்வை, லுங்கி, சட்டை, திரைசீலை உள்ளிட்ட மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களாகவும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில் தற்போது தொழிலில் கூலி பிரச்சினை தலைதூக்கி உள்ளது. இது குறித்து விசைத்தறியாளர்கள் கூறியதாவது:–

துணி உற்பத்தி செய்து கொடுக்கும் கூலிக்குநெசவு செய்யும்விசைத்தறி உரிமையாளர்கள் ஒவ்வொரு ரகத்திற்கும் ஏற்ப கூலி வழங்குகின்றனர். 3 ஆண்டுக்கு ஒரு முறைமுறை புதியகூலி ஒப்பந்தம் செய்யப்படுகிறது. இந்த நிலையில், கடந்த 2014–ல் ஒப்பந்தப்படி ஜவுளி உற்பத்தியாளர்கள் விசைத்தறி உரிமையாளர்களுக்கு கூலி வழங்காமல் மிகவும் குறைத்து வழங்கி வருவதால் தொழிலில் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஆகவே விசைத்தறியாளர்களின் வங்கி கடனை தள்ளுபடி செய்ய உதவ வேண்டும் என ஏற்கனவே மனு கொடுத்து உள்ளோம். வங்கியாளர்கள் கடன்வசூலில் கூடுதல் நெருக்கடி கொடுப்பதால் விசைத்தறி உரிமையாளர்கள் தற்கொலை செய்யும் அளவிற்கு நிலைமைமோசமாகி விட்டது.

கூலிஉயர்வு வழங்காததால் நலிவடைந்த விசைத்தறியாளர்களை காக்கும் பொருட்டு, விசைத்தறியாளர்களின் வங்கி கடன்களை ரத்து செய்ய வேண்டும். இக்கடன் தள்ளுபடிக்குமாநில அளவிலான வங்கி குழுவிற்கு பரிந்துரையைஅனுப்பவேண்டும். தொழில் மிகவும் நலிவடைந்துள்ளதால் கடன் வசூல் நடவடிக்கைகளை அடுத்த 6 மாதங்களுக்கு நிறுத்தி வைக்க வேண்டும்.எங்கள்கோரிக்கையை நிறைவேற்ற துரிதநடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இது குறித்து முதல்–அமைச்சர், மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை மனு அனுப்பி உள்ளோம்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story