உடலில் புகுந்த ஊசியுடன் அவதிப்படும் கர்ப்பிணி சிகிச்சை மூலம் அகற்ற கோரிக்கை


உடலில் புகுந்த ஊசியுடன் அவதிப்படும் கர்ப்பிணி சிகிச்சை மூலம் அகற்ற கோரிக்கை
x
தினத்தந்தி 3 Jun 2018 4:15 AM IST (Updated: 3 Jun 2018 3:01 AM IST)
t-max-icont-min-icon

திருவிடைமருதூர் அருகே உள்ள கோவிந்தபுரம் பகுதியை சேர்ந்தவர் வடிவேல். இவருடைய மனைவி சசிகலா (வயது26). இவரது மார்பு பகுதியில் எக்ஸ்ரே எடுத்து பார்த்த போது ஊசி ஒன்று இருப்பது தெரியவந்தது.

திருவிடைமருதூர்,

திருவிடைமருதூர் அருகே உள்ள கோவிந்தபுரம் பகுதியை சேர்ந்தவர் வடிவேல். இவருடைய மனைவி சசிகலா (வயது26). இவரது மார்பு பகுதியில் எக்ஸ்ரே எடுத்து பார்த்த போது ஊசி ஒன்று இருப்பது தெரியவந்தது. இதனால் சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து சசிகலா கூறியதாவது:- கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 20-ந் தேதி கும்பகோணம் அரசு மருத்துவமனையில் காய்ச்சலுக்காக சிகிச்சை பெற்றேன். அப்போது எனக்கு கவனக்குறைவாக ஊசி போடப்பட்டதால் கையில் ஊசி உள்ளே சென்றது. இது குறித்து நான் கூறியதால் எக்ஸ்ரே எடுத்து பார்த்த போது கையில் ஊசி இருப்பதை டாக்டர்கள் ஒப்பு கொண்டனர். அன்று இரவே தஞ்சை மருத்துவ கல்லூரியில் கையில் அறுவை சிகிச்சை செய்து ஊசியை எடுத்து விட்டதாக டாக்டர்கள் கூறினர். இந்தநிலையில் தற்போது மார்பு பகுதியில் ஊசி இருப்பது போல் உணர்ந்தேன். இது குறித்து டாக்டர்களிடம் சென்று கூறினேன். அப்போது எக்ஸ்ரே எடுத்த போது மார்பு பகுதியில் ஊசி ஒன்று இருப்பது தெரிந்தது. இவ்வாறு அவர் கூறினார்.

இது குறித்து அவரது கணவர் வடிவேல் கூறியதாவது:-

தஞ்சை மாவட்ட கலெக்டரிடம் இந்த பிரச்சினை குறித்து புகார் மனு அளித்துள்ளோம். சசிகலா தற்போது கர்ப்பமாக உள்ளார். எனவே அவரது மார்பு பகுதியில் உள்ள ஊசியை தகுந்த சிகிச்சை மூலம் அகற்றி தாய், சேய் உயிரை காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story