தமிழகத்தில் வளர்ச்சி திட்டங்களை தடுக்கும் அமைப்புகளை தடை செய்ய வேண்டும் எச்.ராஜா பேட்டி
தமிழகத்தில் வளர்ச்சி திட்டங்களை தடுக்கும் அமைப்புகளை தடை செய்ய வேண்டும் என்று பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா கூறினார்.
திருச்சி,
பிரதமர் நரேந்திரமோடி கடந்த 4 ஆண்டுகளில் ஏராளமான வளர்ச்சி திட்டங்களை நிறைவேற்றி உள்ளார். வெளிமாநிலங்களில் வளர்ச்சி திட்டங்கள் வரும்போதெல்லாம் நக்சல்கள் ஊடுருவி தடுப்பது வழக்கம். தமிழ்நாட்டில் தேனி, தர்மபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் நக்சல்களின் செயல்பாடுகள் இருந்தன. அவை எம்.ஜி.ஆர்.ஆட்சி காலத்தில் ஒடுக்கப்பட்டன. தற்போது தமிழகத்தில் மீண்டும் நக்சல்கள் ஊடுருவி விட்டனர். குறிப்பாக உளவுத்துறை செயல் இழந்து விட்டது என்றுதான் சொல்ல வேண்டும். ஸ்டெர்லைட் போராட்டத்தின்போது நக்சல்கள் ஊடுருவலை தடுக்க தமிழக அரசு தவறி விட்டது.
ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது தீய சக்திகள் வன்முறையில் ஈடுபட்டது. அதேபோன்று ஸ்டெர்லைட் போராட்டத்திலும் வன்முறை மூண்டது. தமிழகத்தில், ‘தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரன்’ என்ற சூழல் உருவாகி விட்டது. அவை வேரோடு ஒழிக்கப்பட வேண்டும். தமிழகத்தில் வளர்ச்சி திட்டங்களை தடுக்க முனையும் மே-17, நாம் தமிழர், புரட்சிக்கர மாணவர் முன்னணி, மக்கள் அதிகாரம் போன்ற அமைப்புகள் தடை செய்யப்பட வேண்டும்.
ஸ்டெர்லைட் போராட்டம் குறித்து ரஜினிகாந்தின் கருத்து வரவேற்கத்தக்கது. ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக கொடிதூக்கி போராட்டம் நடத்திய முன்னாள் எம்.எல்.ஏ. பாலபாரதி மற்றும் கம்யூனிஸ்டு தலைவர்கள் தற்போது இரட்டை வேடம் போடுகிறார்கள். அதே வேளையில் ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என முதன் முதலில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டவர் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன்தான்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்போம் என்று கடந்த 40 ஆண்டுகளாக காங்கிரசும், தி.மு.க.வும் கூறி வந்தன. ஆனால், தற்போது 50 நாட்களில் பாரதீய ஜனதா அரசு காவிரி மேலாண்மை ஆணையம் அமைத்து, அதை அரசிதழிலும் வெளியிட்டு விட்டது. இனி காவிரி நதிநீர் தமிழகத்திற்கு முறைப்படி கிடைக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story