எழும்பூர் ரெயில் நிலையத்தின் 10, 11-வது நடைமேடை படிக்கட்டு மூடப்படும் அபாயம்
விரிவாக்க பணி நடைபெற இருப்பதால் எழும்பூர் ரெயில் நிலையத்தின் 10, 11-வது நடைமேடைக்கு செல்லும் படிக்கட்டு மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் பயணிகளுக்கு கடும் சிரமம் ஏற்படும்.
சென்னை,
எழும்பூர் ரெயில் நிலையத்துக்கு பயணிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், ரெயில் நிலையத்தை மேம்படுத்தும் பணிகளை ரெயில்வே நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக பயணிகள் பயன்படுத்தும் நடைபாதைகளை விரிவுபடுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
எழும்பூர் ரெயில் நிலையத்தின் மின்சார ரெயில்களுக்கான டிக்கெட் கவுண்ட்டர் பகுதியில் இருந்து மறுமுனைக்கு செல்வதற்கு நடைபாதை அமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த நடைபாதை 4, 5, 6, 7, 8, 9, 10, 11 நடைமேடைகளுக்கு பயணிகள் செல்வதற்கு பேருதவியாக இருந்து வருகிறது. முதலில் ஒரு வழி பாதையில் அமைக்கப்பட்டு இருந்த இந்த நடைபாதையை இரு வழிப்பாதையாக மாற்ற ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்து பணிகளை செய்து வருகிறது.
அதற்காக ஏற்கனவே 7, 8, 9 நடைபாதைகள் மூடப்பட்டு இரு வழிப்பாதையாக மாற்றும் பணிகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கி நடைபெற்று முடிந்தது. தற்போது அங்கு இருவழிப்பாதைகளில் நடைபாதை அமைக்கப்பட்டு பயணிகள் எளிதாக சென்று வருவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் 9-வது நடைபாதை வரை நீட்டிக்கப்பட்டுள்ள இருவழி நடைபாதையை 10, 11-வது நடைபாதையுடன் இணைக்கும் பணிக்காக முதற்கட்ட பணிகளான தூண் அமைக்கும் பணி 10, 11-வது நடைமேடைகளில் நடைபெற்று வருகிறது. அந்த பணிகள் நிறைவடைந்தவுடன் ஏற்கனவே செயல்பாட்டில் இருக்கும் 10, 11-வது நடைமேடைக்கு செல்லும் படிக்கட்டை மூட திட்டமிட்டு இருப்பதாகவும், பயணிகள் அதற்கு நேர் எதிரே உள்ள மாற்றுப்பாதை வழியாக அடுத்த நடைமேடைக்கு சென்று பயணிக்க வேண்டிய நிலை ஏற்படும்.
10, 11-வது நடைமேடையில் இயக்கப்படும் மின்சார ரெயில்களில் ஏறி பயணிக்க தினமும் ஏராளமான பயணிகள் அந்த படிக்கட்டுகளை பயன்படுத்துவது வழக்கம்.
அந்தவகையில் தற்போது அந்த படிக்கட்டு மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதால், பயணிகள் சிரமத்துக்குள்ளாவார்கள். இதை கருத்தில் கொண்டு அதற்கு மாற்று ஏற்பாடு ஏதாவது செய்த பின்பு, நடைபாதை அமைக்கும் பணியை மேற்கொள்ள வேண்டும் என்பது பயணிகளின் கோரிக்கையாக இருக்கிறது.

Related Tags :
Next Story