8-ம் வகுப்பு மாணவியை ஏமாற்றி திருமணம் செய்து பலாத்காரம் கட்டிட தொழிலாளி கைது
ராசிபுரம் அருகே 8-ம் வகுப்பு மாணவியை ஏமாற்றி திருமணம் செய்து பலாத்காரம் செய்த கட்டிட தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
ராசிபுரம்,
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே உள்ள ஒரு கிராமத்தில் வசிக்கும் 14 வயதான 8-ம் வகுப்பு மாணவி கடந்த 21-ந் தேதி திடீரென மாயமானார். இது குறித்து மாணவியின் தந்தை கொடுத்த புகாரின் பேரில் ராசிபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
திருச்செங்கோடு தாலுகா, காளிப்பட்டி மதுரைவீரன் காலனியைச் சேர்ந்த வரதராஜின் மகனும், சென்ட்ரிங் வேலை செய்யும் கட்டிட தொழிலாளியுமான பிரபு (வயது 21) அந்த மாணவியை ராசிபுரத்தில் உள்ள ஒரு கோவிலில் வைத்து ஏமாற்றி திருமணம் செய்து கொண்டு கர்நாடக மாநிலத்திற்கு அழைத்துச் சென்றதாகவும், பின்னர் அவர் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டதாகவும் போலீசார் விசாரணையில் தெரிய வந்தது.
இந்த நிலையில் நேற்று காலையில் ராசிபுரம் அருகேயுள்ள ஆண்டகளூர்கேட்டில் பிரபு அந்த மாணவியுடன் நின்றிருந்த போது ராசிபுரம் போலீசார் அவரை கைது செய்தனர். அவரிடமிருந்து மாணவியை மீட்டனர். மாணவிக்கு 14 வயது என்பதால் போக்சோ சட்டத்தின் கீழ் பிரபு கைது செய்யப்பட்டார்.
மீட்கப்பட்ட மாணவியை மருத்துவ பரிசோதனைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

Related Tags :
Next Story