காய்கறி மார்க்கெட்டிற்கு ‘சீல்’ வைக்கப்போவதாக நகராட்சி அறிவிப்பு - அமைச்சரை வியாபாரிகள் முற்றுகை
ஆரணியில் கடைகள் இடிந்து விழுந்ததன் எதிரொலியாக காய்கறி மார்க்கெட்டிற்கு ‘சீல்’ வைக்கப்போவதாக நகராட்சி அறிவித்ததற்காக அமைச்சரை வியாபாரிகள் முற்றுகையிட்டனர்.
ஆரணி,
ஆரணியில் உள்ள காய்கறி மார்க்கெட்டில் 3 கடைகள் இடிந்ததை தொடர்ந்து மார்க்கெட்டிற்கு ‘சீல் ’வைக்கப்போவதாக நகராட்சி அறிவித்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த வியாபாரிகள், அமைச்சரை முற்றுகையிட்டு கோரிக்கை வைத்தனர்.
ஆரணி நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள காந்தி மார்க்கெட் கட்டிடத்தின் உட்புறம் காய்கறி கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கடைகளின் சிமெண்டு கான்கிரீட்டுகள் உடைந்து கம்பிகள் வெளியே தெரிகிறது. மேலும் மேற்கூரைகள் ஆபத்தான நிலையில் உள்ளன. இந்த நிலையில் நேற்று முன்தினம் காலையில் காய்கறி மார்கெட்டில் உள்ள 3 கடைகளின் மேற்கூரைகள் இடிந்து விழுந்தன.
இதனை தொடர்ந்து நேற்று நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) ஜார்ஜ் ஆட்டோவில் ஒலிபெருக்கி மூலம் “மார்க்கெட் கடைகளின் மேல்தளம் முழுவதும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் யாரும் காய்கறி மார்கெட்டிற்கு வரவேண்டாம், அப்பகுதி முழுவதும் கடைகள் இருப்பதற்கு தகுதியற்றவை” என்றும் அறிவிப்பு செய்தார். மேலும் கடைகளை ‘சீல்’ வைத்து தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்போவதாகவும் தெரிவித்தார்.
நகராட்சியின் ‘திடீர்’ அறிவிப்பால் காய்கறி வியாபாரிகள் அதிர்ச்சியடைந்தனர். இதனை தொடர்ந்து காய்கறி வியாபாரிகள் சங்க நிர்வாகிகள், வியாபாரிகள் 50-க்கும் மேற்பட்டோர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்திற்கு வந்தனர். அவர்கள் நகராட்சியின் ‘திடீர்’ முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அங்கு இருந்த அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரனை முற்றுகையிட்டனர்.
அப்போது “காய்கறி மார்க்கெட்டிற்கு ‘சீல்’ வைத்தால் 100 கடைக்காரர்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்படும். ஆகவே எங்களுக்கு மாற்று ஏற்பாடு செய்து தரும்வரை தற்போதுள்ள கடைகளை நாங்களே எங்கள் பொறுப்பில் சீரமைத்துக் கொள்கிறோம். இதனால் ஏற்படும் விபத்துகளுக்கும் நாங்களே பொறுப்பேற்கிறோம்” என்று கூறினர். அதற்கு அமைச்சர், “இது போன்ற பிரச்சினைகளில் அரசு சொல்வதை கேளுங்கள். நீங்கள் முடிவு செய்து அனைவரும் கையெழுத்திட்டு தாருங்கள். கலெக்டரிடம் பேசி முடிவு செய்யலாம். அதுவரை மார்கெட்டிற்கு ‘சீல்’ வைப்பது உறுதி” என்று தெரிவித்தார்.
பின்னர் வியாபாரிகள் “நாளை எங்களுக்கு கடைதிறக்க அனுமதி இல்லையென்றால் ஆரணி நகரில் உள்ள அனைத்து வியாபாரிகளும் காய்கறிகள் விற்பனை செய்வதை நிறுத்தி வைப்போம்” என தெரிவித்துவிட்டு கலைந்து சென்றனர்.

Related Tags :
Next Story