கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்த விவசாயிகள் போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு
பசுமை வழி சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தர்மபுரி கலெக்டர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்த விவசாயிகளை, போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
அரூர்,
சேலம் - சென்னை வரை பசுமை வழி சாலை எனும் 8 வழி சாலை அமைக்கப்பட உள்ளது. இந்த சாலை அமைக்கும் பணிக்காக சேலம், தர்மபுரி, திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் நிலம் கையகப்படுத்த அதிகாரிகள் ஆய்வு செய்தனர். தர்மபுரி மாவட்டத்தில் வேடகட்டமடுவு, ஆண்டியூர், முத்தானூர், பட்டுகோணம்பட்டி, எலந்தகொட்டப்பட்டி, தீர்த்தமலை உள்ளிட்ட 40 ஊர்களில் நிலம் கையகப்படுத்த உள்ளது. பசுமை வழி சாலை அமைக்கும் பணிக்காக இந்த பகுதிகளில் நிலங்களை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இப்பகுதிகளில் சாலை அமைந்தால் வனப்பகுதி, விவசாய நிலங்கள் அதிக அளவில் கையகப்படுத்தப்படும் எனக்கூறி அப்பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த நிலையில் பசுமை வழி சாலை அமைக்கும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து, இது தொடர்பாக தர்மபுரியில் நேற்று நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு அளிக்க விவசாயிகள் மோட்டார்சைக்கிள், கார் உள்ளிட்ட வாகனங்களில் செல்ல முயன்றனர்.
இது குறித்து தகவல் அறிந்த அரூர் போலீசார் தர்மபுரி செல்லும் சாலையில் 9 இடங்களில் தடுப்பு கம்பிகள் அமைத்து சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த விவசாயிகளை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் போலீசாருக்கும், அவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதன் காரணமாக அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து ஏராளமான விவசாயிகள் தனியார், அரசு பஸ்களில் தர்மபுரிக்கு சென்றனர். பின்னர் கலெக்டர் அலுவலகத்திற்கு ஊர்வலமாக சென்று கோரிக்கை மனு அளித்தனர்.
அந்த மனுவில் கூறியிருப்பாவது:- பசுமை வழி சாலை திட்டத்தால், பொதுமக்களுக்கோ, விவசாயிகளுக்கோ எந்தவித நன்மையும் விளையப்போவதில்லை. எந்தவிதத்திலும் பயனில்லாத இந்த திட்டத்தை பொதுமக்கள் மீது திணிக்கக்கூடாது. பசுமை வழி சாலை திட்டத்தால் விவசாய விளைநிலங்கள், நீர்நிலைகள், காடுகள், மலைவளங்கள் மற்றும் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும். எனவே இந்த திட்டத்திற்கு எங்கள் விவசாய நிலங்களை ஒருபோதும் தரமாட்டோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மனு அளிக்க வந்த விவசாயிகள் கூறுகையில், பசுமைவழி சாலை திட்டத்தால் பாதிக்கப்படும் விவசாயிகளில் 2 ஆயிரம் பேரை திரட்டி கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க திட்டமிட்டோம். ஆனால் போலீசார் பல்வேறு இடங்களில் தற்காலிக சோதனை சாவடிகளை அமைத்து ஆயிரக்கணக்கான விவசாயிகள் கலெக்டர் அலுவலகத்திற்கு வருவதை தடுத்து விட்டனர். ஜனநாயக முறையில் மனு அளிக்க வருபவர்களை தடுக்கக்கூடாது என்றனர்.

Related Tags :
Next Story