தஞ்சை அம்மா தோட்டம் பகுதி டாஸ்மாக் கடையை வேறு இடத்துக்கு மாற்றாவிட்டால் முற்றுகை போராட்டம்
தஞ்சை அம்மாதோட்டம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை வேறு இடத்துக்கு மாற்றாவிட்டால் முற்றுகை போராட்டத்தில் ஈடுபடப்போவதாக குறைதீர்க்கும் கூட்டத்தில் தமிழக மக்கள் வாழ்வுரிமை இயக்கம் வலியுறுத்தி உள்ளது.
தஞ்சாவூர்,
தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று மாவட்ட வருவாய் அதிகாரி சக்திவேல் தலைமையில் நடந்தது. அப்போது தமிழக வாழ்வுரிமை இயக்க நிறுவன தலைவர் ரவிச்சந்திரன் தலைமையில் மாநில தலைவர் ராபர்ட், மாநில நிர்வாகக்குழு தலைவர் ஜீவரத்தினம், ஆலோசனைக்குழு தலைவர் முருகரெத்தினவேல், மாநில துணைத்தலைவர் மனோ, நகர தலைவர் காமராஜ், மாவட்ட துணைத்தலைவர் சசிகுமார், துணை செயலாளர் அய்யாவு ஆகியோர் முன்னிலையில் மாவட்ட வருவாய் அதிகாரியிடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-
தஞ்சை கரந்தையில் 4-வது வார்டில் உள்ளது அம்மாதோட்டம். இந்த பகுதியில் அமைந்துள்ள டாஸ்மாக் கடையால் அந்த வழியாக செல்லும் பள்ளி மாணவ, மாணவிகள் அச்சத்துடனே சென்று வருகிறார்கள். டாஸ்மாக் கடையில் சமூக விரோதிகள் குடித்து விட்டு பெண்கள், மாணவிகளை கேலி, கிண்டல் செய்வதுடன், வழிப்பறி செய்யும் நிலை உள்ளது.
அந்த டாஸ்மாக் கடையில் சில மாதங்களுக்கு முன்பு தான் கொலை சம்பவம் நடந்தது. எனவே பொதுமக்களை பாதுகாக்கும் வகையில் டாஸ்மாக் கடையை வேறு பகுதிக்கு மாற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் தமிழக மக்கள் வாழ்வுரிமை இயக்கம் சார்பில் வருகிற 26-ந்தேதி டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.
தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள கூடநாணல் தெற்கு தெருவை சேர்ந்தவர்கள், மாவட்ட வருவாய் அதிகாரி சக்திவேலிடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-
எங்கள் தெருவில் உள்ள 25-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர். ஆட்சி காலத்தில் வீட்டுமனை கொடுக்கப்பட்டது. அதில் தற்போது அனைவரும் வீடுகள் கட்டி குடியிருந்து வருகிறார்கள். இதில் குடியிருந்து வருபவர்களுக்கு இன்னும் பட்டா வழங்கப்படவில்லை. ஆனால் அனைவருக்கும் இருப்பிட சான்று வழங்கப்பட்டுள்ளது. இருப்பிட சான்று வழங்கியும் பட்டா வழங்காதது ஏன்? என தெரிய வில்லை. எனவே உடனடியாக பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
காவிரி டெல்டா விவசாயிகள் சங்க தலைவர் ரவிச்சந்தர் கொடுத்த மனுவில், “மேட்டூர் அணை ஜூன் 12-ந்தேதி திறக்க இயலாத சூழ்நிலை உள்ளது. எனவே தஞ்சை மாவட்டத்தை கடந்த ஆண்டைபோல வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும்”என கூறப்பட்டுள்ளது.
தஞ்சையை அடுத்த உடையார்கோவில் கீழகோவில்பத்து ஆதி திராவிடர் தெருவை சேர்ந்த சங்கர், ராஜா, கரிகாலன், சதீஷ்குமார், ரமேஷ், செல்வராஜ், பாஸ்கர், கலியன், வீரமணி, விஜய், ராஜமாணிக்கம், ஆறுமுகம் ஆகிய 12 பேரும், தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி சக்திவேலிடம் மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
கீழகோவில்பத்து கிராமத்தில் உள்ள சியாமளாதேவி அம்மன்கோவில் திருப்பணி வேலைகளுக்காக ஒரு குடும்பத்திற்கு ரூ.1000 வரி வசூல் செய்யப்பட்டு வருகிறது. ஆனால் எங்கள் 12 பேரின் குடும்பங்களையும் ஊரை விட்டு ஒதுக்கி வைத்து வரி வாங்கக்கூடாது. எங்களிடம் யாரும் பேசக்கூடாது என பிரிவினையை ஏற்படுத்தி கோஷ்டி பூசலை ஏற்படுத்துகின்றனர். இது எங்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்துகிறது. எங்கள் கிராமத்தில் உள்ள அனைவரும் ஒற்றுமையாக செயல்பட்டு கோவில் திருப்பணி வேலைகளை முடித்து கும்பாபிஷேகம் நடத்த உறுதுணையாக இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் அதில் கூறி உள்ளனர்.

Related Tags :
Next Story