பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்


பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 6 Jun 2018 4:30 AM IST (Updated: 6 Jun 2018 1:06 AM IST)
t-max-icont-min-icon

பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்து திருத்துறைப்பூண்டி, கோட்டூர் ஆகிய இடங்களில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருத்துறைப்பூண்டி,

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்தும், விலையை உடனடியாக குறைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் திருத்துறைப்பூண்டி புதிய பஸ் நிலையம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு முன்னாள் எம்.எல்.ஏ. உலகநாதன் தலைமை தாங்கினார். இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் பாஸ்கர், மாநில கட்டுப்பாட்டுக்குழு உறுப்பினர் வையாபுரி, மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர்கள் ஞானமோகன், ஜோசப், விவசாய சங்க மாவட்ட துணைச்செயலாளர் ராஜா, நகர செயலாளர் முருகேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல் கோட்டூர் பஸ் நிலையம் முன்பு இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர், பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் ஒன்றிய செயலாளர் மாரிமுத்து தலைமை தாங்கினார்.

முன்னாள் ஒன்றியக்குழு துணைத்தலைவர் தங்கையன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் ஜெயராமன், சிவசண்முகம், ஒன்றிய நிர்வாகக்குழு உறுப்பினர்கள் வீராசன், மனோகரன், கிளை செயலாளர் சேகர் உள்பட பலர் கலந்து கொண்டு பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்தாத மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். 

Next Story