ஏரல் தாமிரபரணி ஆற்றில் பிணமாக கிடந்த முதியவர் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்தவரா?; போலீசார் விசாரணை


ஏரல் தாமிரபரணி ஆற்றில் பிணமாக கிடந்த முதியவர் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்தவரா?;  போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 6 Jun 2018 2:00 AM IST (Updated: 6 Jun 2018 1:14 AM IST)
t-max-icont-min-icon

ஏரல் தாமிபரணி ஆற்றில் அடையாளம் தெரியாத முதியவர் பிணமாக கிடந்தார். அவர், விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்தவரா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஏரல், 

ஏரல் தாமிபரணி ஆற்றில் அடையாளம் தெரியாத முதியவர் பிணமாக கிடந்தார். அவர், விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்தவரா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

முதியவர் பிணம்

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் தாமிரபரணி ஆற்றுப் பாலத்திற்கு மேல்பக்கம் உள்ள ஆற்று மணலில் சுமார் 65 வயது மதிக்கதக்க முதியவர் ஒருவர் பிணமாக கிடந்தார். இதுகுறித்து சிறுத்தொண்டநல்லூர் தலையாரி முருகானந்தம் ஏரல் போலீசில் புகார் செய்தார். இதை தொடர்ந்து ஏரல் போலீஸ் இன்ஸ்பெக்டர் பட்டாணி, சப்–இன்ஸ்பெக்டர்கள் சுந்தர்ராஜ், சண்முகசுந்தரம் மற்றும் போலீசார் முதியவர் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

போலீசார் விசாரணை

இறந்த கிடந்தது யார்? என உடனடியாக அடையாளம் தெரியவில்லை. அவருடைய உடலுக்கு அருகில் கிடந்த ஒரு மஞ்சள் கலர் பையில் சுயம்புலிங்க சுவாமி கோவில் மம்சாபுரம் என்று அச்சடிக்கப்பட்டு இருந்தது. அந்த பைக்குள் ஒரு மது பாட்டில் இருந்தது. அவர் சந்தன கலரில் கட்டம் போட்ட அரைக்கை சட்டையும், கட்டம் போட்ட லுங்கியும் அணிந்திருந்தார்.

மேலும் அந்த பையில் இருந்த ஒரு காகிதத்தில்,‘ நான் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்தவன். சிறுவயதில் இருந்து ஏரல் கோவிலுக்கு வந்து செல்வேன். எனக்கு வாழ பிடிக்கவில்லை’ என்று எழுதப்பட்டு இருந்தது. ஆனால், அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற விவரம் இல்லை.

விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்தவரா?

இதுகுறித்து ஏரல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அவர் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்தவராக இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இது தொடர்பாக விருதுநகர் மாவட்ட போலீசாருக்கு தகவல் கொடுத்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story