குடிநீர் வழங்கக்கோரி காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு
மேலவாழக்கரையில் குடிநீர் வழங்கக்கோரி காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
வேளாங்கண்ணி,
நாகை மாவட்டம் கீழையூர் ஒன்றியம் மேலவாழக்கரை கிராமத்தில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்திற்கு கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த பல நாட்களாக மேலவாழக்கரை கிராமத்திற்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுவதில்லை என்று கூறப்படுகிறது. இதைதொடர்ந்து மேலவாழக்கரை கிராம பொதுமக்கள் நேற்று முன்தினம் மேலப்பிடாகை - திருக்குவளை சாலையில் காலிக்குடங்களுடன் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த கீழையூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜோதிமணி, பாஸ்கரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
போக்குவரத்து பாதிப்பு
அப்போது மேலவாழக்கரை கிராமத்திற்கு கடந்த ஒரு மாதகாலமாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் குடிக்க தண்ணீர் இல்லாமல் பெரும் அவதிக்குள்ளாகி வருகிறோம். எனவே உடனே குடிநீர் வழங்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். இதை தொடர்ந்து குடிநீர் வினியோகம் செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்தனர். இதில் உடன்பாடு ஏற்பட்டதால் பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சாலை மறியலால் மேலப்பிடாகை - திருக்குவளை சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Tags :
Next Story