காவிரி நீர்பிடிப்பு பகுதியில் மழை எதிரொலி ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிப்பு
காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் மழையின் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது.
பென்னாகரம்,
தமிழகத்தின் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றான தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு கர்நாடகம், கேரளா மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் அருவியை கண்டுகளிக்க வருவது வழக்கம். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கடும் வறட்சியின் காரணமாக காவிரி ஆறு வறண்டு பாறைகளாக காட்சி அளித்தது.
இந்த நிலையில் தற்போது கர்நாடக மாநில காவிரி நீர் பிடிப்பு பகுதி மற்றும் தமிழக எல்லை பகுதிகளில் கடந்த 4-ந் தேதி முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து நாள்தோறும் அதிகரிப்பதும் மற்றும் குறைவதுமாக இருந்து வருகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் ஒகேனக்கல்லுக்கு 1,700 கன அடியாக இருந்த நீர் வரத்து நேற்று காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 2,600 கன அடியாக அதிகரித்தது. அது நேற்று மாலை 5 மணி நிலவரப்படி 3 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. இந்த தண்ணீர் வரத்தை தமிழக - கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத் துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் ஒகேனக்கல்லுக்கு வந்த சுற்றுலா பயணிகள் எண்ணெய் மசாஜ் செய்து, மெயின் அருவி, சினி பால்ஸ் மற்றும் காவிரி ஆற்றில் குளித்து மகிழ்ந்தனர். குடும்பத்தினருடன் பரிசல் பயணம் மேற்கொண்டும் காவிரி அழகை கண்டு ரசித்தனர். பின்னர் மீன் அருங்காட்சியகம், முதலைப்பண்ணை, சிறுவர் பூங்கா உள்ளிட்ட பகுதிகளையும் சுற்றுலா பயணிகள் ஆர்வ முடன் கண்டு ரசித்தனர்.

Related Tags :
Next Story