வாடகை பணம் கேட்ட தகராறில் வீட்டு உரிமையாளரை கத்தியால் தாக்கிய 2 பேர் கைது


வாடகை பணம் கேட்ட தகராறில் வீட்டு உரிமையாளரை கத்தியால் தாக்கிய 2 பேர் கைது
x
தினத்தந்தி 7 Jun 2018 3:30 AM IST (Updated: 7 Jun 2018 1:04 AM IST)
t-max-icont-min-icon

வாடகை பணம் கேட்டது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் வீட்டு உரிமையாளரை கத்தியால் தாக்கியதாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஆலந்தூர்,

சென்னையை அடுத்த பள்ளிக்கரணை ஜல்லடியன்பேட்டையைச் சேர்ந்தவர் தாமோதரன் (வயது 36). இவரது வீட்டில் அருண்குமார்(30), ரூபன்பாபு(38) ஆகியோர் வாடகைக்கு குடியிருந்து வருகின்றனர். இவர்களிடம் தாமோதரன் வாடகை பணம் கேட்டார். இதுதொடர்பாக அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.

இதில் ஆத்திரம் அடைந்த 2 பேரும் சேர்ந்து வீட்டின் உரிமையாளரான தாமோதரனை கத்தியால் தாக்கினார்கள். இதில் படுகாயம் அடைந்த தாமோதரன், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து பள்ளிக்கரணை போலீசார் வழக்குப்பதிவு செய்து அருண்குமார், ரூபன்பாபு ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 1 அடி நீளமுள்ள கத்தியை போலீசார் பறிமுதல் செய்தனர்.


Next Story