புதுச்சேரியில் இருந்து கடத்தி வரப்பட்ட 3,072 மதுபாட்டில்கள் பறிமுதல் 2 பேர் கைது


புதுச்சேரியில் இருந்து கடத்தி வரப்பட்ட 3,072 மதுபாட்டில்கள் பறிமுதல் 2 பேர் கைது
x
தினத்தந்தி 7 Jun 2018 4:15 AM IST (Updated: 7 Jun 2018 2:45 AM IST)
t-max-icont-min-icon

ராசிபுரம் அருகே மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் நடத்திய வாகன சோதனையில் புதுச்சேரியில் இருந்து கடத்தி வரப்பட்ட 3,072 மதுபாட்டில்கள் ஜீப்புடன் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

நாமக்கல்,

நாமக்கல் மாவட்ட மதுவிலக்கு அமலாக்க பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு செந்தில் தலைமையில் ராசிபுரம் கோனேரிப்பட்டி அருகில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுபாஷ், சப்-இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் நேற்று காலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது ஆத்தூரில் இருந்து ராசிபுரம் நோக்கி வந்த ஜீப் ஒன்றை நிறுத்தி சோதனை செய்தனர். இந்த சோதனையின் போது அதில் 3,072 மதுபாட்டில்கள் இருப்பதும், இவை அனைத்தும் புதுச்சேரியில் இருந்து கடத்தி வரப்படுவதும் தெரிய வந்தது.

2 பேர் கைது

இதையடுத்து கடத்தி வரப்பட்ட மதுபாட்டில்களையும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ஜீப்பையும் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் மதுபானம் கடத்தலில் ஈடுபட்ட விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த ரகுராமன் (வயது27), ஷேக்காதர் (37) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஜீப் உரிமையாளரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story